Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோர்டு தானியங்கி ரைட் ஷேரிங் திட்டம் 2021 முதல்

by MR.Durai
18 August 2016, 10:29 am
in Auto News, Wired
0
ShareTweetSend

ஃபோர்டு நிறுவனம் முழு தன்னாட்சி வாகனத்தை வனிக பயன்பாட்டு சேவைக்கு  2021 முதல் அறிமுகம் செய்யும் நோக்கில் திட்டங்களை வகுத்து வருகின்றது. ரைட் ஷேரிங் ஃப்ளீட் சேவையில் மிகப்பெரிய முதலீடு செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

முழுமையான தானியங்கி வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும்பொழுது சவாரியை பகிர்ந்து கொள்ளும் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் பொழுது சிறப்பான வகையில் கார் உரிமையாளர்களுக்கு வருவாயை ஈட்டி தரும் வகையில் அமைந்திருக்கும்.

ஃபோர்டு ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டத்தின் அங்கமாக செயல்பட உள்ள முழுமையான தானியங்கி வாகனங்களை வடிவமைப்பதற்கு இரண்டு மடங்கு அதிகமாக ஃபோர்டு முதலீடு செய்ய உள்ளது. 4  தானியங்கி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இனைந்து தன்னுடைய சிலிகான் வேலி குழு இரட்டிப்பு மற்றும் பாலோ ஆல்டோ பகுதியில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் சிறப்பான கட்டமைப்பினை அதிகரிக்கும் நோக்கில் உள்ளது.

முழு தன்னாட்சி வாகனங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ஃபோர்ட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் மார்க் ஃபீல்ட்ஸ் கூறுகையில் அடுத்த பத்தாண்டில் ஆட்டோமேட்டிக் மற்றும் ஓட்டுனரில்லா வாகனங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஃபோர்டு உருவாக்கிய நகரும் அசெம்பிளிங் லைனை (Ford’s moving assembly line) போல புதிய புரட்சியை தன்னாட்சி கார்களில் ஏற்படுத்த வகையில் செயல்பட உள்ளோம்.

சாலையின் தரம் மற்றும் தன்னாட்சி கார்களின் பாதுகாப்பு , சமூக சவால்கள் மற்றும் சூற்றுச்சூழல் சவால்களை சமாளிக்கும் வகையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவோம்.

ஃபோர்டின் முதல் தன்னாட்சி வாகனம் வெளிவரும் பொழுது SAE ( Society of Automotive Engineers) அமைப்பின் 4 தர அம்சத்தின் அடிப்பையில் அதாவது ஸ்டீயிலிங் வீல் , பிரேக் பெடல் இல்லாமல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும்.

ஃபோர்டு நிறுவனம் தற்பொழுது 30 முழு தன்னாட்சி ஃப்யூசன் ஹைபிரிட் கார்களை கலிபோர்னியா, அரிசோனா மற்றும் மிச்சிகன் சாலைகளில் சோதனை செய்து வருகின்ற நிலையில் இதனை அடுத்த வருடத்தில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.  தானியங்கி வாகனங்களுக்கு ஏற்ற வகையிலான ஆராய்ச்சி திறனை அதிகரிக்கும் நோக்கில் மேம்பட்ட நெறிமுறைகள், 3D மேப்பிங், LiDAR, மற்றும் ரேடார் மற்றும் கேமரா உணரிகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது.

4 நிறுவனங்கள்

சிலிகான் வேலி வேலடைன் நிறுவனம் LiDAR சென்சார்கள் (light detection and ranging -LiDAR)  தயாரிப்பதில்  சிறந்து விளங்கி வருகின்றது. LiDAR உதவியுடன் சிறப்பான தரத்தில் உயர் தர மேப்பிங் வசதியை முதலாவதாக ஃபோர்டு பயன்படுத்தி கொள்ளும்.

சமீபத்தில் ஃபோர்டு நிறுவனம் இஸ்ரேல் நாட்டின் SAIPS நிறுவனத்தை கையகப்படுத்தியது. SAIPS நிறுவனம் மிக சிறப்பான மேம்பட்ட நெறிமுறைகளை கொண்ட படங்கள் மற்றும் வீடியோ பிராசிங் செய்து சூற்றுச்சூழல் நிலையை உணர்ந்து செயல்படும் வகையிலான சிகனல்களை பெற உதவும்.

நிரென்பெர்க் நியூரோசைன்ஸ் LLC (Nirenberg Neuroscience LLC) நிறுவனத்துடன் சிறப்பு உரிம ஒப்பந்தத்தின் வாயிலாக மனித மூளையை போல உணர்ந்து செயல்படும் வகையிலான நுட்பத்தினை தன்னாட்சி வாகனங்களில் செயல்படுத்த உள்ளது.

3டி மேப்பிங் சிறப்பான முறையில் பெறும் நோக்கில் சிவில் மேப்ஸ் (Cvil Maps) நிறுவனத்துடன் இனைந்து சிறப்பான சாலை வரைபடங்களை உயர்தரத்தில் பெற உள்ளது.

பாலோ ஆல்டோ வளாகத்தில் இரு புதிய கட்டிங்கள் மற்றும் 1,50,000 சதர அடி பரப்பில் ஆய்வு கூடங்களை அமைந்துள்ளது. புதிய கட்டிங்கள் மற்றும் ஆய்வு கூடங்கள் 2017 ஆம் ஆண்டு முதல் முழுமையான பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தற்பொழுது 130க்கு மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ஃபோர்ட் முழு தன்னாட்சி வாகனங்களை வடிவமக்கும் குழுவில் உள்ளனர்.

எதிர்காலத்தில்  தன்னாட்சி கார்களில் மாபெரும் புரட்சியை ஃபோரடு மோட்டார் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Related Motor News

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

இந்தியாவில் குறைந்த விலை ஃபோர்டு எலக்ட்ரிக் காரை தயாரிக்கின்றதா.!

இந்தியா வரவிருக்கும் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுக விபரம்

Tags: Ford
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan