அர்ஜூனா விருது பெற்ற முதல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் – கௌரவ் கில்

0

gaurav gill

இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான அர்ஜூனா விருதினை 2019-ல் முதன்முறையாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரரான கௌரவ் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்  விளையாட்டு துறையில் சிறந்த விளையாட்டு வீரர்களைப் பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்கு `அர்ஜுனா விருது’ வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.

Google News

விளையாட்டு வீரர்களுக்கு விருதை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவிக்கிறார். இதில் மோட்டார் பந்தய வீரர் கௌரவ் கில்லுக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

கில் ஒரு சிறந்த மோட்டார் ஸ்போர்ட் வீரர் ஆவார். 37 வயதான இவர் மூன்று முறை ஆசிய பசிபிக் ராலி சாம்பியன் (APRC) பட்டத்தை வென்ற ஒரே இந்தியர், மேலும் ஆறு முறை இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்பை (ஐஎன்ஆர்சி) வென்றுள்ளார். அவர் முந்தைய ஆண்டு WRC2 இல் முன்னுரிமை இல்லாதவராக போட்டியிட்டார். ராலி துருக்கி, வேல்ஸ் ராலி ஜிபி மற்றும் ராலி ஆஸ்திரேலியா என இந்த ஆண்டு மூன்று சுற்றுகளில் மீண்டும் பங்கேற்கிறார்.

கில்லின் வெற்றி தடகள மற்றும் இந்திய மோட்டார் ஸ்போர்ட் விளையாட்டில் அதிக அங்கீகாரத்தைத் தருவது மட்டுமல்லாமல், வருங்கால இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.