43,000 ஓப்பல் டீசல் கார்களை திரும்ப பெற ஜெர்மன் உத்தரவு

தவறான எமிஷன் டெஸ்ட் விதிகளின் படி ஓப்பல் கார் தயாரிப்பாளர்கள் தயாரித்து உலகளவில் விற்பனை செய்த 43,000 டீசல் கார்களை திரும்ப பெற வேண்டும் என்று ஜெர்மன் நாட்டின் போக்குவரத்து ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை ஜெர்மன் போக்குவரத்து அதிகாரிகள் கடந்த 17ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். மேலும் வர்கள் க்டனாஹ் 2013 முதல் 2016ம் ஆண்டு வரையில் ஒப்பல் நிறுவனம் விற்பனை செய்த கார்களில் சட்டவிரோதமாக பாதிக்கப்பட்ட டிவைஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓப்பல் நிறுவனம் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்ட ஏற்கனவே 96,000 வாகனங்களை திரும்ப பெற்று விட்டது என்றும், 43,000 கார்களில் இந்த தவறுகள் இன்னும் சரிய செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் ஓப்பல் நிறுவன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தவறு நடத்தை ஒப்பு கொண்டுள்ள நிறுவனம், அதிகாரப்பூர்வமாக தவறுகளை சரி செய்தவாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜெர்மன் நாட்டின் போக்குவரத்து ஆணையம் தவறான டிவைஸ் பொருத்தப்பட்ட கார்களை திரும்ப பெற உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த தவறு குறித்து அதிகாரபூர்வ விசரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share