இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பின் காரணமாக மேக்னைட் எஸ்யூவி விலை ரூ.52,400 முதல் அதிகபட்சமாக டாப் வேரியண்டிற்கு ரூ.1,00,400 வரை குறைந்துள்ளது.
முன்பாக ரெனால்ட் உட்பட மஹிந்திரா, எம்ஜி, டொயோட்டா, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் என பெரும்பாலான நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்துள்ளது. தற்பொழுது கார்களுக்கு 18 % மற்றும் 40 % என இரு பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மிகப்பெரிய அளவில் விற்பனையை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
NEW NISSAN MAGNITE | PRE-GST REVISION (28%+1% CESS) | POST-GST REVISION (18%) | Price Difference (₹) |
---|---|---|---|
MT VISIA | 614,000 | 561,600 | 52,400 |
MT VISIA+ | 664,000 | 607,400 | 56,600 |
MT ACENTA | 729,000 | 666,800 | 62,200 |
MT N-CONNECTA | 797,000 | 729,000 | 68,000 |
MT KURO Edition | 830,500 | 759,600 | 70,900 |
MT TEKNA | 892,000 | 815,900 | 76,100 |
MT TEKNA+ | 927,000 | 848,000 | 79,000 |
EZ-Shift VISIA | 674,500 | 616,900 | 57,600 |
EZ-Shift ACENTA | 784,000 | 717,100 | 66,900 |
EZ-Shift N-CONNECTA | 852,000 | 779,300 | 72,700 |
EZ-SHIFT KURO Edition | 885,500 | 809,900 | 75,600 |
EZ-Shift TEKNA | 947,000 | 866,200 | 80,800 |
EZ-Shift TEKNA+ | 982,000 | 898,200 | 83,800 |
Turbo MT N-CONNECTA | 938,000 | 857,900 | 80,100 |
Turbo MT KURO Edition | 971,500 | 888,600 | 82,900 |
Turbo MT TEKNA | 1,018,000 | 931,100 | 86,900 |
Turbo MT TEKNA+ | 1,054,000 | 964,000 | 90,000 |
Turbo X-TRONIC CVT ACENTA | 999,400 | 914,100 | 85,300 |
Turbo X-TRONIC CVT N-CONNECTA | 1,053,000 | 963,100 | 89,900 |
Turbo CVT KURO Special Edition | 1,086,500 | 993,800 | 92,700 |
Turbo X-TRONIC CVT TEKNA | 1,140,000 | 1,042,700 | 97,300 |
Turbo X-TRONIC CVT TEKNA+ | 1,176,000 | 1,075,600 | 100,400 |
மேக்னைட்டில் டீலர்கள் மூலம் CNG ரெட்ரோஃபிட்மென்ட் கிட்டின் விலையை ரூ.71,999 ஆக இப்பொழுது குறைத்துள்ளது, இதனால் கூடுதலாக ரூ.3,000 வரை சேமிக்கலாம். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான Motozen ஆல் உருவாக்கப்பட்ட இந்த கிட், அங்கீகரிக்கப்பட்ட ஃபிட்மென்ட் மையங்களில் நிறுவப்படுகின்றது.
மேலும் 3 ஆண்டுகள்/1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை பெற்று 1.0 லிட்டர் NA பெட்ரோல் MT வேரியண்டில் மட்டும் கிடைக்கும் நிலையில், கேஸ் டேங்க் பொருத்தப்பட்டாலும் 336-லிட்டர் பூட் ஸ்பேஸைத் தக்க வைத்துக் கொள்கிறது.