Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்

by MR.Durai
22 April 2021, 8:32 am
in Auto News
0
ShareTweetSend

19971 hero gogoro partnership

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட கோகோரோ குளோபல் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பேட்டரி மாற்றுவதற்கான நுட்பங்கள் மற்றும் அதற்கான மையங்களை கையாளுவதற்கான நுட்பங்களை பகிர்ந்து கொள்ள உள்ளன.

கோகோரோவின் தொழில்துறையின் திறன் வாய்ந்த முன்னணி பேட்டரி இடமாற்று தளத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக இருநிறுவனங்களும் பேட்டரி மாற்றும் கூட்டு முயற்சியை நிறுவுகின்றன. மேலும், கோகோரோ நெட்வொர்க் வாகனங்கள் ஹீரோ பிராண்ட் மூலம் சந்தைக்கு கொண்டு வர மின்சார வாகன மேம்பாட்டுடன் ஒத்துழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோகோரோ நெட்வொர்க் என்பது ஒரு உயர் திறன் கொண்ட பேட்டரி இடமாற்று தளமாக செயல்படுகின்றது. Frost & Sullivan நிறுவனத்தால் உலகளாவிய ஸ்வாப்பபிள் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கான 2020 ஆம் ஆண்டின் சிறந்த நிறுவனம் என்ற விருதுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 3,75,000 க்கும் மேற்பட்ட ரைடர்ஸ் மற்றும் 2,000 பேட்டரி இடமாற்ற நிலையங்களுடன், கோகோரோ நெட்வொர்க் 265,000 தினசரி பேட்டரி இடமாற்றுகளை 174 மில்லியனுக்கும் அதிகமான மொத்த பேட்டரி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.

ஹீரோ நிறுவனம் முன்பாக ஏத்தர் எலக்ட்ரிக் தயாரிப்பாளருடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக கோகோரோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் அடுத்த சில மாதங்களுக்குள் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8ac6a gogoro scooter 1

Related Motor News

6 விநாடிகளில் கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பேட்டரி மாற்றலாம்

கோகோரோ 2 & 2 பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்

Tags: GOGORO Scooters
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

Ather Energy

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan