உலகில் மிகவும் கடுமையான சவால்கள் நிறைந்த மோட்டார் சைக்கிள் சவாரி பந்தயங்களில் ஒன்றான டக்கார் ராலியில் இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவின் 2018 ஆம் ஆண்டின் போட்டிக்கான பைக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் நடைபெற உள்ள மிகவும் சவாலான டாக்கர் ரேலியில் இந்தியாவின் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இடம்பெற உள்ள 450சிசி எஞ்சின் பெற்ற பைக்கின் முதல் டீசர் படத்தின் மேற்பகுதி வெளியாகியுள்ளது.
முந்தைய மாடலை விட தோற்ற மாற்ற அமைப்பில் சில மாறுதல்கள் பெற்றதாக வரவுள்ள இந்த பைக்கில் 54 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 450சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதுடன், முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப் தவிர பேனல்கள் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக இருக்கலாம்.
ஹீரோ மற்றும் ஸ்பீடுபிரெயின் கூட்டணியில் வடிவமைக்கப்பட்டுள்ள பைக்குகளை மிக கடுமையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயணிக்கும் வகையில் 9000 கிமீ தொலைவினை டாக்கர் ரேலி பந்தயம் கொண்டுள்ளது. ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி.எஸ் சந்தோஷ் மற்றும் Joaquim ரோட்ரிகஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.