Skip to content

ரூ.1,14,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா கார்ஸ்

elevate apex edition

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கான சிறப்பு 2024 வருடாந்திர இறுதி மாத சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது தலைமுறை அமேஸ் தவிர்த்து மற்ற அனைத்து கார்களுக்கும் கிடைக்கின்றது

அதிகபட்ச சலுகையாக ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி காருக்கு ரூ. 1,14,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன, மேலும் சிட்டி e:HEV காருக்கு ரூ.90000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இரண்டாவது தலைமுறை அமேஸ் மாடலுக்கு ஒரூ. 1,12,000 வரை சலுகை கிடைக்கின்றது.
இது தவிர நடுத்தர எஸ்யூவி சந்தையில் கிடைக்கின்ற எலிவேட் மாடலுக்கு அதிகபட்சமாக 95 ஆயிரம் வரை கிடைக்கின்றது.
இந்தச் சலுகையில் கேஷ் பேக் உட்பட எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ், போன்றவைகளும் அடங்கும். சலுகைகள் அனைத்தும் 2024 ஆம் ஆண்டிற்கான தயாரிப்பு மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் குறிப்பிட்ட சலுகைகள் வேரியண்ட் , சில டீலர்களை பொருத்து மாறுபடும் அதே நேரத்தில் ஸ்டாக் கையிருப்பில் உள்ளவரை மட்டுமே கிடைக்கும் என ஹோண்டா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.