Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

வீடு தேடி வரும் டீசல் சேவையை துவங்கியது : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

by automobiletamilan
March 20, 2018
in செய்திகள்

இந்தியாவின் முன்னணி எண்னெய் நிறுவனமாக விளங்கும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) முதற்கட்டமாக புனே நகரில் டீசல் எரிபொருளை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக டீசல் டோர் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் டீசல் – ஐஓசி

வீடு தேடி காய்கறி, மளிகை சாமான்கள் உட்பட மொபைல் , ஆடைகள் என பலவற்ற வீட்டிற்கே டெலிவரி செய்து  வரும் நிலையில் பெட்ரோல் பங்குகளில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு பதிலாக வீட்டிற்கு டீசல் டெலிவரி தொடங்கபட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெங்களூரில் இதேபோன்ற பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை ஏஎன்பி என்ற நிறுவனம் மை பெட்ரோல் பம்ப் என்ற பெயரில் தொடங்கியது. ஆனால்,  ஹோம் டெலிவரி செய்வதற்கு பாதுகாப்பு சான்றிதல் இல்லை எனக் கூறி பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உரிமத்தை ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் முதல் முறையாக இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு முறைப்படி சான்றிதழ் வழங்கியுள்ளத தொடர்ந்து முதற்பட்டமாக டீசல் டெலிவரியை அங்கீகாரத்துடன் வழங்க தொடங்கியுள்ளது.

ஹோம் டெலிவரி சேவையை தொடங்கி  வைத்துபோது பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சீவ் சிங் கூறுகையில், வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து எரிபொருள் செய்யும் திட்டத்தை முதல்முதலில் புனே நகரில் தொடங்குகிறோம். இதற்கு பிஇஎஸ்ஓ நிறுவனம் சான்று அளித்துள்ளது. முதல்கட்டமாக டீசலும், அதன்பின் பெட்ரோலும் டெலிவரி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், மற்ற இடங்களுக்கும் இந்த சேவை விரிவாக்கம் செய்யவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Tags: Diesal at doorstepsIndian Oil corporationஐஓசிபுனேவீடு தேடி வரும் டீசல்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version