ஆகஸ்ட் 2016 இருசக்கர வாகன விற்பனை நிலவரம்

கடந்த ஆகஸ்ட் 2016-ல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதனை அறிந்துகொள்ளலாம். ஹீரோ ,ஹோண்டா, ராயல் என்பீல்டு போன்ற நிறுவனங்கள் அபரிதமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

splendor-ismart-110-bike

ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முதன்மையான பைக் தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டில் ஆகஸ்ட் 2015-ல் 4, 80,537 அலகுகளை விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 6, 16,424 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து 28 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் உள்நாட்டில் 600,525 வாகனங்களும் வெளிநாட்டில் 12,214 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக மாதந்திர விற்பனையில் 6 லட்சம் இலக்கினை கடந்துள்ளது.  வருகின்ற பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் புதிய  அச்சீவர் 150 பைக் உள்பட ஐஸ்மார்ட் நுட்பத்துடன் கூடிய பேஸசன் ப்ரோ , சூப்பர் ஸ்பிளென்டர் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஹோண்டா டூ வீலர்ஸ்

ஆகஸ்ட் 2016ல் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஹோண்டா டூ வீலர் பதிவு செய்து புதிய உயரத்தை மாதந்திர விற்பனையில் எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2015ல்  3, 73,136 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 4, 66,342 இருசக்கர வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்து 25 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏற்றுமதி உள்நாடு என இரண்டும் சேர்த்து ஆகஸ்ட் 2015ல் 3, 95,196 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 4, 92,416 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. மேலும் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் ஸ்கூட்டர் விற்பனையில் 3,36,393 விற்பனை செய்து இரண்டாவது முறையாக 3 லட்சம் இலக்கினை ஸ்கூட்டர் பிரிவில் கடந்துள்ளது.

யமஹா மோட்டார்

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் கடந்த வருடத்தின் ஆகஸ்டில் 61,440 வாகனங்களும் இந்த வருட ஆகஸ்ட் மாதம் 74,868 வாகனங்கள் விற்பனை செய்து 22 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் நேபால் நாட்டின் விற்பனையும் அடங்கும். யமஹா ஸ்கூட்டர் பிரிவில் சிக்னஸ் ஆல்ஃபா மற்றும் ரே-இசட்ஆர் , பேசினோ ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

டிவிஎஸ்

டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடுகையில் 30.13 சதவீத வளர்ச்சி அடைந்து 238,984 வாகனங்களை ஆகஸ்ட் 2016ல் விற்பனை செய்துள்ளது. கடந்த  ஆகஸ்டில் 1, 83,653 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மிக சிறப்பான போட்டியாளராக விளங்கும் ஜூபிடர் அமோக வரவேற்பினை தக்கவைத்து கொண்டுள்ளது.

TVS-jupiter-MillionR-1

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2015 வருடத்தின் ஆகஸ்டில் 137,948 வாகனங்களும் இந்த வருட ஆகஸ்ட் மாதம் 174,719 வாகனங்கள் விற்பனை செய்து 26.66சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. பஜாஜ் 150 அவென்ஜர் மற்றும் 220 அவென்ஜர் , பல்சர் மாடல்கள் மற்றும் வி15 போன்றவை சிறப்பான பங்களிப்பினை அளித்துவருகின்றது. மேலும் புதிதாக வரவுள்ள பல்சர் விஎஸ்400 போன்றவை பஜாஜ்க்கு வலுசேர்க்கும்.

bajaj-v15-bike-white-sideview

ராயல் என்பீல்டு 

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2015 வருடத்தின் ஆகஸ்டில் 41,600 வாகனங்களும் இந்த வருட ஆகஸ்ட் மாதம் 54,735 வாகனங்கள் விற்பனை செய்து 36 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. புதிய வரவான ராயல் என்பீல்டு ஹிமாலயன் அமோக வரவேற்பினைபெற்று வரும் நிலையில் தங்களுடைய அனைத்து மாடல்களின் விலையை ரூ.1000 முதல் ரூ.4000 வரை என்பீல்டு உயர்த்தியுள்ளது.