இந்தியாவில் களமிறங்க டொயோட்டா டைஹட்சூ ஆர்வம்..!

0

டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷனின் கீழ் செயல்படுகின்ற பட்ஜெட் விலை கார் பிராண்டு மாடலான டைஹட்சூ இந்திய சந்தையில் சிறிய ரக கார்களை விற்பனை செய்வதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை தொடங்கியுள்ளது.

டைஹட்சூ கார்கள்

டொயோட்டா குழுமத்தின் அங்கமாக உள்ள சிறிய ரக கார் தயாரிப்பாளரான டைஹட்சூ பட்ஜெட் விலையில் தரமான கார்களை ஜப்பான், மலேசியா, சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்ற டைஹட்சூ இந்தியாவில் மாருதி சுசூகி, ஹூண்டாய் , டட்சன் போன்ற நிறுவனங்களின் சிறிய ரக கார்கள் உள்பட ரூ. 5 லட்சம் விலைக்குள் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Google News

Daihatsu D Base Concept

க்விட்,ஆல்ட்டோ  மற்றும் இயான் போன்ற சிறிய ரக பட்ஜெட் விலை கார் மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையிலான எந்த மாடல்களையும் டொயோட்டா தற்போது விற்பனை செய்யாமல் உள்ள இடைவெளியை தனது பட்ஜெட் பிராண்டு வாயிலாக ஈடுகட்டும் நோக்கில் வளர்ந்து வருகின்ற இந்திய மோட்டார் சந்தையில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது.

எட்டியோஸ் லிவா மற்றும் எட்டியோஸ் போன்ற கார்களை விட குறைந்த விலை ஹேட்ச்பேக் ரக மாடல்கள் க்ராஸ்ஓவர்கள் மற்றும் காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களை இந்திய சந்தையில் தயாரிக்கும் நோக்கில் உள்ள டைஹட்சு நிறுவனம் டட்சன் கார்களுக்கு உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் வாயிலாக உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Daihatsu D Base Concept Photo

இதற்காக தனது டொயோட்டா தொழிற்சாலை அமைந்துள்ள பிடாடி பிரிவிலே கூடுதலான உற்பத்தி லைன்களை திறப்பதற்கான முயற்சிகளையும், முதல் டைஹட்சு கார் மாடலை 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

Daihatsu D Base Concept Pictures