குவாட்ரிசைக்கிள் பலபரிட்சை ஆரம்பம்

0
பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு வர்த்தக ரீதியான சந்தையில் மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ள பஜாஜ் நிறுவனத்துக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

என்ன அதிர்ச்சி என்றால் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பியாஜியோ, போலரிஸ் போன்ற நிறுவனங்களும் குவாட்ரிசைக்கிளுக்கு ஆர்வம் தெரிவித்துள்ளது.  பியாஜியோ நிறுவனம் ஐரோப்பா சந்தையில் குவாட்ரிசைக்கிள் விற்பனையில் நல்ல இடத்தினை பெற்றுள்ளது.

Bajaj+RE60

எனவே இந்திய சந்தையில் பல நிறுவனங்கள் ஆர்வம் தெரிவிப்பதால் பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு கடும் நெருக்கடி ஏற்படுவது உறுதி என்பதே வல்லுனர்களின் கருத்து குவாட்ரிசைக்கிளுக்கு அரசு வகுக்க உள்ள முழுமையான திட்டமே இந்த நிறுவனங்களின் வருகையை உறுதிப்படுத்தும்.

எனவே பஜாஜ் ஆர்இ60க்கு கடுமையான போட்டி காத்திருக்கின்றது.