ரூ. 10,000 முதல் 10 லட்சம் வரை தள்ளுபடி கார்கள் விபரம் – ஜிஎஸ்டி எதிரொலி

வருகின்ற ஜூலை 1-ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறைக்கு முன்னதாக ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் மாபெரும் விலை தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.

 ஜிஎஸ்டி எதிரொலி

இந்தியாவில் ஜூலை மாதம் 1-ந் தேதி அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி வருகையை ஒட்டி இருப்பில் உள்ள வாகனங்களை விற்பனை செய்ய மோட்டார் தயாரிப்பாளர்கள் மாபெரும் விலை தள்ளுபடியை வழங்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக மாருதி,ஹூண்டாய்,ஃபோர்டு , நிசான் மற்றும் மஹிந்திரா உள்பட சொகுசு கார் தயாரிப்பாளர்களான பென்ஸ்,ஆடி போன்ற நிறுவனங்களும் சலுகையை அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி தங்களுடைய மாடல்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி விலையை வழங்க தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக விற்பனை ஆகின்ற மாருதியின் ஆல்டோ மற்றும் ஸ்விஃப்ட் காருக்கு ரூ.35,000 வழங்கப்படுகின்றது.

ஹூண்டாய்

இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் கார் நிறுவனம் ரூபாய் 25,000 முதல் ரூ. 2.50 லட்சம் வரை வழங்குகின்றது. புதிய எலைட் ஐ20 மற்றும் 2017 எக்ஸென்ட் கார்களுக்கு ரூபாய் 25,000 மற்றும் பிரமியம் ரக பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற சான்டாஃபீ எஸ்யூவி காருக்கு 2.50 லட்சம் வழங்கப்படுகின்றது. மேலும் இயான் காருக்கு ரூ.45,000, கிராண்ட் ஐ10 காருக்கு ரூ. 62,000 முதல் ரூ. 73, 000 வரை,  வெர்னா மாடலுக்கு  ரூ. 80,000 முதல் ரூ. 90, 000 வரை வழங்குகின்றது.

ஃபோர்டு

ஃபோர்டு இந்தியா நிறுவனம் ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை தள்ளுபடி வழங்குகின்றது. ஈக்கோஸ்போர்ட்  மாடலுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையும், ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் மாடலுக்கு  ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை வழங்குகின்றது.

மஹிந்திரா

இந்தியாவின் யுட்டிலிட்டி வாகன தயாரிப்பு நிறுவனம் மஹிந்திரா ரூ. 27,000 முதல் ரூ. 90,000 வரை தள்ளுபடி வழங்குகின்றது. எக்ஸ்யூவி500 மாடலுக்கு ரூ.90,000 , கேயூவி100 மாடலுக்கு ரூ.72,000 மற்றும் ஸ்கார்ப்பியோ மாடலுக்கு ரூ. 27,000 வரை வழங்கின்றது.

ஹோண்டா

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா இந்தியா நிறுவனம் ரூ. 14,500 முதல் ரூ. 60,000 வரை தள்ளுபடி பல்வேறு மாடல்களுக்கு வழங்குகின்றது. ரூ. 14,500 பிரியோ மாடலுக்கும், அமேஸ் காருக்கு ரூ. 50,000 ,ஜாஸ் காருக்கு ரூ. 17,000 மற்றும் பிஆர்-வி எஸ்யூவி மாடலுக்கு ரூ. 60,000 வழங்குகின்றது.

நிசான்

நிசான் இந்தியா நிறுவனம் டெரோனோ எஸ்யூவிக்கு ரூ.80,000 வரையும்,மைக்ரோ போன்ற கார்களுக்கு ரூ.25,000 வரை வழங்குகின்றது.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ரூ.76,000 முதல் ரூ.1,00,000 வரை சலுகைகளை போலோ மற்றும் வென்ட்டோ வழங்குகின்றது. இதுதவிர இலவச காப்பீடு,வட்டி குறைப்பு, இலவச ஆர்எஸ்ஏ போன்ற சலுகைகளையும் வழங்குகின்றது.

ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனம் 2017 மாடல் ஆக்டிவா மற்றும் சூப்பர்ப் கார்களுக்கு 1 லட்சம் தள்ளுபடியும், 2016-2017 மாடலுக்கு ரூ. 1.90 லட்சம் தள்ளுபடியும் வழங்குகின்றது. ரேபிட் மாடலுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்குகின்றது.

டொயோட்டா

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா,எட்டியோஸ் , கரோல்லா, கேம்ரி போன்ற கார்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்னோவா காருக்கு ரூ. 40,000 மற்றும் எட்டியோஸ் மாடலுக்கு ரூ.20,000, கரோல்லா காருக்கு ரூ.60,000 மற்றும் கேம்ரி மாடலுக்கு 70,000 வழங்கப்படுகின்றது.

ஃபியட்

ஃபியட் நிறுவனத்தின் அவென்ச்சூரரா க்ராஸ்ஓவர் ரக மாடலுக்கு ரூ. 95,000 விலை சலுகை, புன்ட்டோ காருக்கு ரூ. 1 லட்சம் மற்றும் லீனியா காருக்கு 90,000 வழங்கப்படுகின்றது.

டாடா

டாடா மோட்டார்சின் ஹெக்ஸா மாடலுக்கு ரூ.15,000 வரை சலுகை வழங்கப்படுகின்றது.

சொகுசு கார் நிறுவனங்கள்

ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்களும் அதிகபட்சமாக பல்வேறு விதமான தள்ளுபடியை அறிவித்துள்ளது. குறிப்பாக ஆடி நிறுவனம் ரூ. 10 லட்சம் தள்ளுபடி வழங்குகின்றது.பிஎம்டபிள்யூ எக்ஸ்ஷோரும் விலையில் 12 சதவிகித வரியை மட்டுமே விதிக்கின்றது. பென்ஸ் நிறுவனம் 8 லட்சம் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் 11 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகின்றது.

 

Recommended For You