விற்பனையில் டாப் 10 கார்கள் – 2015

இந்திய சந்தையில் விற்பனை நிலவரப்படி டாப் 10 கார்கள் 2015 பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் மாருதி சுசூகி ஆறு இடங்களை கைப்பற்றி ஒட்டுமொத்த கார் விற்பனையில் முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது.

omni

10. மாருதி ஆம்னி

மாருதி சுசூகி ஆம்னி விற்பனைக்கு வந்தது முதல் சீரான விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. ஆம்னி வேன் ஆம்புலன்ஸ் முதல் சரக்கு எடுத்து செல்வது வரை பயன்படுகின்றது. 2015ம் வருடத்தில்  72,778 ஆம்னி வேன்கள் விற்பனை ஆகி முதல் 10 கார் விற்பனையில் 10ஆம் இடத்தில் உள்ளது.

 

9. மாருதி செலிரியோ

மாருதி  செலிரியோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் சிறப்பான மைலேஜ் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் போன்றவை வெகுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. 74,942 செலிரியோ கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

celerio car

8. ஹோண்டா சிட்டி

சி- பிரிவு செடான் கார்களில் முதன்மையான ஹோண்டா சிட்டி கார்  பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. தரமான என்ஜின் , நம்பிக்கை மற்றும் புதிய டீசல் என்ஜின் ஆப்ஷன் போன்றவை சிட்டி காரினை 76,546 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

2014-Honda-City

7.  மஹிந்திரா பொலிரோ

ஊரக சந்தை தொடங்கி நகர சந்தை வரை கடந்த 10 ஆண்டுகளாக எஸ்யூவி கார்களின் ராஜாவாக மஹிந்திரா பொலிரோ திகழ்ந்து வருகின்றது. 2015ஆம் ஆண்டில் 80,914 பொலிரோ கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

New-20Bolero

6.  ஹூண்டாய் கிராண்ட் ஐ10

இளம் வாடிக்கையாளர்களை கவரும் தோற்றத்தில் அமைந்துள்ள கிராண்ட ஐ10 கார் 2015யில் 1.11 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. ஸ்விஃப்ட் காருக்கு மாற்றாக அமைந்துள்ள கிராண்ட் ஐ10 சிறப்பான கையாளதலுக்கு ஏற்ற காராகும்.

hyundai-grand-i10

 

[nextpage title=”அடுத்த பக்கம்”]

5.  ஹூண்டாய் எலைட் ஐ20

கிராண்ட் ஐ10 காம்பேக்ட் ஹேட்ச்பேக் பிரிவில் சிறப்பாக உள்ளதை போல பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவில் 50 % பங்கினை எலைட் ஐ20 பெற்று விளங்குகின்றது. 2015 ஆம் ஆண்டில் 1.19 லட்சம் ஐ20 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

ஹூண்டாய் எலைட் ஐ20

4.  மாருதி வேகன்ஆர்

டால்பாய் ஹேட்ச்பேக் என்ற பெயரால் அழைக்கப்படும் மாருதி வேகன்ஆர் சிறப்பான மைலேஜ் , குறைவான விலை போன்ற காரணங்களால் சிறப்பான விற்னை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. 1.55 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

wagonR

3. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த 2005 முதல் 2015 வரை தொடர்ந்து சந்தையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஸ்விஃப்ட் கார் 1.92 லட்சம் கார்கள் 2015யில் விற்பனை செய்துள்ளது.

maruti-swift

2. மாருதி டிசையர்

ஸ்விஃப்ட் காரின் செடான் மாடலான டிசையர் இந்த வருடத்தில் 2.19 லட்சம் கார்களை விற்பனை செய்து பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது. சிறப்பான மைலேஜ் , இடவசதி, தரம் போன்றவை இதன் மிகப்பெரிய பலமாகும்.

மாருதி ஸ்விஃப்ட் டிசையர்

1.மாருதி ஆல்ட்டோ

குறைவான விலை , குறைந்த பராமரிப்பு செலவு , மைலேஜ் ஓன்ற காரணங்களால் முதல் தலைமுறை கார் வாங்குபவர்களின் மிக சரியான சாய்ஸாக மாருதி ஆல்ட்டோ அமைந்துள்ளது.இந்தியாவிலே அதிகம் விற்பனையான மாருதி 800 காரின் சாதனை இந்த வருடத்தில் ஆல்ட்டோ கார் வீழ்த்தியது குறிப்பிடதக்கதாகும்.  2.49 லட்சம் ஆல்ட்டோ கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

maruti-Alto800

 

மேலும் படிக்க : டாப் 5 ஃபிளாப் கார்கள் 2015