உற்சாகத்தில் 4 கார் நிறுவனங்கள் – புதிய கார்

0

டாடா டியாகோ , டட்சன் ரெடி-கோ , ஃபோக்ஸ்வேகன் அமியோ என மூன்று கார்களும் விற்பனையில் சிறப்பாக கடந்த சில மாதங்களாக செயல்பட்டு புதிய உற்சாகத்தை கார் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. டியாகோ கார் 5114 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

tata-tiago

Google News

டாடா டியாகோ

டாடா மோட்டார்சின் புதிய தொடக்கமாக அமைந்துள்ள டியாகோ கார் தொடர்ச்சியாக அமோக வரவேற்பினை பெற்று வருகின்றது. சிறப்பான இம்பேக்ட்  டிசைன் வடிவ தாத்பரியங்களுடன் அதிகப்படியான வசதிகள் சிறப்பான கட்டமைப்பு மற்றும் மைலேஜ் போன்றவை நல்லதொரு பலமாக அமைந்துள்ளது.

போல்ட் மற்றும் ஸெஸ்ட் மாடல்கள் பெரிதும் கைகொடுக்காத நிலையில் டியாகோ அமோகமாக விற்பனை ஆகி ஒட்டுமொத்த டாடா பயணிகள் கார் விற்பனையில் 38 சதவீத பங்களிப்பை டாடா டியாகோ வழங்கியுள்ளது.

டட்சன் ரெடி-கோ

நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்டான டட்சன் ரெடி-கோ கார் கடந்த ஜூலை மாதத்தில் 3944 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. கோ மற்றும் கோ ப்ளஸ் என இரு பட்ஜெட் ரக மாடல்களும் தோல்வியை அடைந்துள்ள நிலையில் டட்சனின் புதிய மாடலாக ரெனோ க்விட் காரின் அடிப்படையாக கொண்ட ரெடி-கோ கார் சிறப்பான வரவேற்பினை பெற்று நிசான் சந்தை மதிப்பில் 61 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது.

datsun-redi-go-car

ஃபோக்ஸ்வேகன் அமியோ

பெட்ரோல் மாடலில் மட்டும் வெளிவந்துள்ள அமியோ காம்பேக்ட் ரக செடான் கார் ஃபோக்ஸ்வைகன் நிறுவனத்தின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள அமியோ 2222 கார்கள் விற்பனை ஆகி ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனையில் 51 சதவீத பங்களிப்பினை பெற்று விளங்குகின்றது.

volkswagen-ameo

 

ஹோண்டா பிஆர்-வி

ஹோண்டா நிறுவனத்தின்முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான பிஆர்வி சிறப்பான வரவேற்பினை பெற்று 3333 கார்கள் விற்பனை ஹோண்டா ஒட்டுமொத்த விற்பனையில் 24 சதவீத பங்களிப்பினை பெற்றுள்ளது.

honda-br-v-suv-car