மாருதி சியாஸ் விற்பனை அமோகம்

மாருதி சுஸூகி சியாஸ் செடான் கார் மொத்தம் 50,000 கார்கள் விற்பனையை கடந்துள்ளது. நாட்டில் 43,000 கார்களையும் வெளிநாடுகளில் 7,000 கார்களும் என மொத்தம் 50,000 சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸூகி சியாஸ்
மாருதி சியாஸ் 

ஹோண்டா சிட்டி காருக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தி வரும் நடுத்தர செடான் ரக கார் பிரிவில் சிட்டி காரை தொடர்ந்து மாருதி சியாஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது. எஸ்எக்ஸ் 4 செடான் காருக்கு மாற்றாக வந்த சியாஸ் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

மாருதி சுஸூகி சியாஸ் கார் கடந்த அக்டோபர் 2014ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது. பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் K வரிசை என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 94பிஎச்பி ஆற்றலை தரும். மெனுவல் மற்றும் தானியங்கி என இரண்டு கியர்பாக்சிலும் கிடைக்கின்றது. 1.3 லிட்டர் டீசல் என்ஜின் 89பிஎச்பி ஆற்றலை தரும். மெனுவல் கியர்பாக்சில் மட்டும் கிடைக்கின்றது.

மாருதி சியாஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 20.7 கிமீ ஆகும். சியாஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 26.2 கிமீ ஆகும்.

இபிடி,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், முன்பக்க இரட்டை காற்றுப்பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் அமைப்பு போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

மாருதி சியாஸ் கார் வாங்கியவர்களில் 65 % அதிகமானோர் முந்தைய மாருதி வாடிக்கையாளர்களாகும்.

பிரிமியம் ரக செடான் காரான மாருதி சியாஸ் போட்டியார்களாக ஹோண்டா சிட்டி , ஹூண்டாய் வெர்னா , ஃபியட் லீனியா போன்ற கார்கள் உள்ளது.

பட்ஜெட் கார் என்றால் மாருதி என்ற பெயரினை கொண்டுள்ளது. இது போன்ற பிரிமியம் கார்களுக்கு என தனியான நெக்ஸா பிரிமியம் சேவை மையங்களை திறந்து வருகின்றது. முதல் நெக்ஸா சேவை மையத்தினை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நெக்ஸா மாருதி பிரிமியம் டீலர்களை துவங்க உள்ளது. இந்த ஷோரூம்களில் மட்டுமே இனி சியாஸ் செடான் மற்றும் வரவிருக்கும் எஸ் கிராஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

Maruti Ciaz crosses 50,000 new sales mark