டாப் 10 கார் நிறுவனங்கள் – ஜூன் 2017

மாதாந்திர விற்பனை நிலவரப்படி கடந்த ஜூன், 2017 மாத கார் விற்பனை முடிவில் முன்னணி வகித்த முதன்மையான 10 கார் நிறுவனங்களின் பட்டியலை இங்கே காணலாம். முதலிடத்தில் மாருதி சுசுகி நிறுவனமும், அதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.

கார் விற்பனை – ஜூன் 2017

ஜிஎஸ்டி வருகையினால் பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை கடுமையான சரிவினை சந்தித்துள்ள நிலையில் குறிப்பாக டொயோட்டா உள்பட அனைத்து முன்னணி கார் விற்பனை விபரமும் சரிந்தே காணப்படுகின்றது.

நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம் ஜூன் மாத நிலவரப்படி மொத்தம் 93,263 கார்களை உள்நாட்டிலும், 13,131 கார்களை ஏற்றுமதி செய்யப்பட்டு மொத்தமாக 1,06,394 கார்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பாக மாருதியின் விற்பனையில் ஆல்ட்டோ, பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட், டிசையர் போன் கார்கள் முக்கிய பங்காற்றுகின்றது.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம் 37,562 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில் கடந்த வருடம் ஜூன், 16 உடன் ஒப்பீடுகையில் 5.6 சதவிகத வீழ்ச்சி அடைந்துள்ளது.

விற்பனையில் மிகப்பெரிய வீழ்ச்சியை டொயோட்டா சந்தித்துள்ளது, குறிப்பாக டொயோட்டா நிறுவனம் கடந்த ஜூன் 2016-ல் 13,502 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில் ஜூன் 2017 ல் வெறும் 1973 கார்களை மட்டுமே விற்பனை செய்து 85 % சந்தையை இழந்துள்ளது.  ஜிஎஸ்டி வரவினால் ஏற்பட்ட இந்த இழப்பினை டொயோட்டா ஈடுசெய்யும் வகையில் அதிபட்சமாக 2 லட்சம் வரை ஃபார்ச்சூனர் விலை குறைந்துள்ளது.

அனைத்து மோட்டார் வாகன தயாரிப்பாளர்களும் ஜூன் 2017 மாதந்திர விற்பனையில் சரிவினைச சந்தித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி எதிரொலியின் காரணமாக ஏற்பட்ட இந்த இழப்பு வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதை கார்களின் விலை குறைப்பு முக்கிய காரணமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியளவில் கார் விற்பனையில் முதன்மையான 10 இடங்களை பிடித்த கார் நிறுவனங்களின் பட்டியலை அட்டவனையில் காணலாம்.

முதன்மையான் 10 கார் நிறுவனங்கள் – ஜூன் 2017 (Automobile Tamilan)
 வ.எண்  கார் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை
1. மாருதி சுசுகி 93,263
2. ஹூண்டாய் 37,562
3. மஹிந்திரா 15,388
4. ஹோண்டா கார்ஸ் 12,804
5. டாடா மோட்டார்ஸ் 11,176
6. ரெனால்ட் 6,840
7. ஃபோர்டு 6,149
8. நிசான் 4,590
9. வோக்ஸ்வேகன் 2,500
1௦. டொயோட்டா 1,973

 

Recommended For You