விற்பனையில் பட்டைய கிளப்பும் யமஹா FZ 25 பைக் நிலவரம்

0

யமஹா நிறுவனத்தின் புதிய 250சிசி பைக் மாடலாக களமிறங்கிய யமஹா FZ 25 பைக் நான்கு மாதங்களில் 11,477 அலகுகள் விற்பனை செய்யப்பட்டு அதிரடியை கிளப்பி வருகின்றது. தமிழ்நாட்டில் யமஹா FZ 25 விலை ரூ.1,20,335 என விற்பனை செய்யப்படுகின்றது.

யமஹா FZ 25 பைக் விற்பனை நிலவரம்

எஃப்இசட் வரிசையில் யமஹா ஜனவரி மாதம் இறுதியில் வெளியிட்ட எஃப்இசட் 250 அல்லது எஃப்இசட் 25 பைக் மாதந்தோறும் விற்பனை முடிவில் சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தும் விபரம் சியாம் விற்பனை அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

Google News

மார்ச் மாதம் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் மொத்தம் 11,447 அலகுகளை யமஹா இந்தியா விற்பனை செய்துள்ளது. மாதம் வாரியாக விபரம் பின் வருமாறு.

மார்ச் 2017 –  3,584 அலகுகள்

ஏப்ரல் 2017 – 3,595  அலகுகள்

மே 2017 – 2,299 அலகுகள்

ஜூன் 2017 – 1,999 அலகுகள்

குறிப்பாக ஜூன் மாதம் விற்பனை குறைவாக இருப்பதற்கான காரணம் ஜிஎஸ்டி எனப்படுகின்ற சரக்கு மற்றும் சேவை வரி முறையின் வருகையே காரணமாகும். ஜிஎஸ்டிக்கு பிறகு யமஹா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ. 2200 வரை குறைக்கப்பட்டு  யமஹா FZ 25 விலை ரூ.1,20,335 விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

yamaha FZ25 fuel tank

யமஹா FZ 25 எஞ்சின் விபரம்

யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் FZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.  148 கிலோ எடை கொண்ட எஃப்இசட் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவுகொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது.

யமஹா ஃபேஸர் 25

அடுத்து வருகின்ற பண்டிகை காலத்துக்கு முன்னதாக இந்த பைக்கின் அடிப்படையிலான முழு அலங்கரிக்கப்பட்ட அல்லது ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட ஃபேஸர் 25 பைக் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.