விற்பனை டாப் 10 கார்கள் ஜனவரி 2016

0

கடந்த ஜனவரி 2016 மாத விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். பலேனோ காரை பின்னுக்கு தள்ளி எலைட் ஐ20 கார் முன்னேறியுள்ளது.

ஆல்ட்டோ

Google News

கடந்த மூன்று மாதங்காளாக மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் விற்பனை அதிகரித்து வந்திருந்தாலும் வருடத்தின் முதல் மாதத்தில் சீரான வளர்ச்சியே காணப்படுகின்றது. மிக குறுகிய காலத்தில் பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் கார் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

வழக்கம் போல மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ , டிசையர் , ஸ்விஃப்ட் , வேகன் ஆர் போன்ற கார்கள் பட்டியலில் முதல் 4 இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது. பலேனோ தாக்கத்தால் ஸ்விஃப்ட் கார் விற்பனை சரிந்துள்ளது . அதாவது கடந்த வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 29 % வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் ஹோண்டா சிட்டி கார்கள் சீரான வளர்ச்சியை தக்கவைத்துள்ளது. செலிரியோ 9வது இடத்தில் உள்ளது.

Top-10-Selling-Cars-january-2016