விற்பனையில் டாப் 10 கார்கள் – நவம்பர் 2016

0

மாதாந்திர கார் விற்பனையில் கடந்த நவம்பர் 2016யில் விற்பனையில் முன்னனி வகித்து டாப் 10 கார்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். பயணிகள் கார் பிரவின் முதல் 10 இடங்களில் முதன்முறையாக டாடா டியாகோ இடம்பெற்றுள்ளது.

tata tiago

Google News

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் சரிவில் உள்ள சந்தையில் பல்வேறு சலுகைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்ற நிலையில் வழக்கம் போல இந்தியாவின் முன்னனி தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நிறுவனம் 10 இடங்களில் 6 இடங்களை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது.

மிக சவாலான விலை அதிகப்படியான டீலர் நெட்வொர்க் , தரமான கார்கள் என இந்தியாவின் ஒட்டுமொத்த கார் தயாரிப்பு சந்தையில் 50 சதவீத பங்களிப்பினை மாருதி பெற்றுள்ளது. அதனைதொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் உள்ளது.

ரெனோ க்விட் .  ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 கார்கள் வழக்கம் போல இடம்பெற்றுள்ளது. மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ 23,320 கார்களை விற்பனை செய்து  முதலிடத்தில் உள்ளது.அதனை தொடர்ந்து மாருதி நிறுவனத்தின் கார்களான டிசையர் , வேகன்ஆர் , ஸ்விஃப்ட் , புதிய பெலினோ போன்ற கார்களுடன் செலிரியோ மாடலும் உள்ளது.

இவற்றுக்கு எல்லாம் சவாலாக நுழைந்துள்ள புதிய மாடல்தான் டாடா மோட்டார்சின் டியாகோ மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் சவலான மாடலை டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த நவம்பர் 2016யில் 6008 கார்களை விற்பனை செய்து ஒட்டுமொத்த கார் விற்பனையிலும் மஹிந்திரா மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் பட்டியல் – நவம்பர் 2016

வ.எண் மாடல் விபரம் நவம்பர் 2016
1.  மாருதி சுஸூகி ஆல்ட்டோ 23,320
2. மாருதி சுஸூகி டிசையர் 17,218
3. மாருதி சுஸூகி வேகன்ஆர் 15,556
4. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 14,594
5. மாருதி சுஸூகி பெலினோ 11,093
6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 11,059
7. மாருதி சுஸூகி செலிரியோ 9,543
8. ரெனோ க்விட் 7,847
9.  ஹூண்டாய் எலைட் ஐ20 7,601
10. டாடா டியாகோ 6,008