விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2016

0

கடந்த ஏப்ரல் 2016 மாத விற்பனையில் இந்திய சந்தையில் முன்னிலை வகித்த டாப் 10 பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் என இரண்டும் இந்த பட்டியலில் உள்ளது.

2015-Hero-Splendor-

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஏப்ரல் மாத பைக் விற்பனையில் 2.33,935 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தினை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் ஸ்பிளெண்டர் பைக்குகள் 2,24,238 விற்பனை ஆகியுள்ளது.

ஆக்டிவா மற்றும் ஸ்பிளெண்டர் என இரண்டும் கடந்த ஒரு வருடமாகவே மாறி மாறி மாதந்திர விற்பனையில் முதலிடத்தினை பெற்று வருகின்றன. மொத்தம் உள்ள முதல் 10 இருசக்கர வாகனங்களில்  ஹீரோ நிறுவனத்தின் 4 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஸ்பிளெண்டர் , HF டீலக்ஸ் , பேஸன் மற்றும் கிளாமர் ஆகும்.

ஹோண்டா நிறுவனத்தினை ஆக்டிவா மற்றும் ஷைன் பைக்குகள் இடம்பெற்றுள்ளன. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மற்றும் சிடி100 மாடல் இடம்பிடித்துள்ளது. மேலும் டிவிஎஸ் நிறுவனத்தில் எக்ஸ்எல் சூப்பர் மற்றும் ஜூபிடர் ஸ்கூட்டரும் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2016

 மாடல் விபரம்  ஏப்ரல் 2016
1 ஹோண்டா ஆக்டிவா  2,33,935
2 ஹீரோ ஸ்பிளெண்டர் 2,24,238
3 ஹீரோ HF டீலக்ஸ் 1,16,537
4 ஹீரோ பேஸன் 98,976
5 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 67,045
6 ஹீரோ கிளாமர் 66,756
7  பஜாஜ் சிடி100 66,409
8 ஹோண்டா சிபி ஷைன் 52,751
9    பஜாஜ் பல்சர் 50,419
10    டிவிஎஸ் ஜூபிடர் 43,256

 

தற்பொழுது நமது இணையதளம் டெய்லிஹண்ட் ( Dailyhunt (formerly as Newshunt) ) வாயிலாக கிடைக்கின்றது. டெய்லிஹண்ட் செயலியில் வாகனம் பிரிவினை பயன்படுத்தி அதில் நம் தளத்தினை உங்களின் விருப்பமான தளமாக இணைத்துக்கொள்ளவும்…