ஹாட் மே விற்பனை நிலவரம் – 2013

0
2013 மே மாத கார் சந்தை நிலவரங்களை கானலாம். இந்திய கார் சந்தையை சில மாதங்களாகவே சரிவு பாதையிலே உள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் பயணிக்கின்றது.

ஹாட் மே


1. ஹோண்டா நிறுவனம் 4ஆம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. டாடா மற்றும் டொயோட்டா நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியது.
2. மாருதி ஆல்டோ 800 காரை விட மாருதி டிசையர் விற்பனை அதிகரித்துள்ளது.
3. செவர்லே என்ஜாய் சிறப்பான வரவேற்பினை பெற்று ஜிஎம் நிறுவனத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளது. 2173 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
4.  கடந்த ஆண்டு மே மாதத்தை விட 9 % விற்பனை சரிவை சந்ததித்துள்ளது. இது மிக பெரிய வீழ்ச்சியே ஆகும்.
5. மாருதி சுசூகி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா உள்ளது.
6.  ஸ்கார்பியோ விற்பனை அதிகரித்துள்ளது. டஸ்ட்டர் விற்பனை சரிவடைந்துள்ளது.
அமேஸ்
7.  சரிவில் இருந்த டொயோட்டா இன்னொவா விற்பனை அதிகரித்துள்ளது.
8. இந்திய சந்தையின் பெரும் பகுதியை யூட்டிலிட்டி வாகனங்களே ஆக்ரமித்துள்ளது.
9. டாடா ஆர்யா 3 கார்கள் மட்டுமே விற்றுள்ளன. மேலும் நானோ 1048 கார்கள் விற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நானோ 948 மட்டுமே விற்பனையானது.
10. அமேஸ் காரின் தாக்கம் செடான் பிரிவில் உள்ள அனைத்து கார்களுக்கும் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாப் 10 கார்கள்- மே
1. மாருதி டிசையர்–17625
2. மாருதி ஆல்டோ 800–16411
3. மாருதி ஸ்விஃப்ட் –14353
4. மாருதி வேகன்ஆர்–12952
5. மஹிந்திரா பொலிரோ-9780
6. ஹூண்டாய் ஐ10– 8469
7. ஹூண்டாய் இயான்- 8406
8. ஹோண்டா அமேஸ்-6036
9. ஹூண்டாய் ஐ20- 5701
10. டாடா இண்டிகா விஸ்டா-5500