ஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி

0

2019-Maruti-Suzuki-Alto

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை வீழ்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் டாப் 10 இடங்களில் பிடித்துள்ள கார்களை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சம்மேளனத்தின் அறிக்கையின்படி மொத்த பயணிகள் வாகன விற்பனை ஆக்ஸ்ட் 2018 மாதத்துடன் ஒப்பீடுகையில் ஆகஸ்ட் 2019-ல் விற்பனை வீழ்ச்சி 41.09 சதவீதமாகும்.

Google News

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் 8 கார்கள் , டாப் 10 கார்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  கார் விற்பனை சரிவினை சந்தித்து வரும் நிலையில் எர்டிகா விற்பனை 139 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மாருதி ஈக்கோ விற்பனை 39 % வளர்ச்சி பெற்றுள்ளது. முந்தைய வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடுகையில், அடுத்து இந்தியாவின் சிறந்த காராக வலம் வருகின்ற டிசையர் விற்பனை ஆகஸ்ட் 2019-ல் 40 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது. முதன்மையான இடத்தில் இடம்பெறுகின்ற மாருதி ஆல்ட்டோ விற்பனை 54 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2018-ல் மொத்தமாக 22,237 கார்கள் விற்பனை ஆகியிருந்தது.

சில மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வந்த டொயோட்டா கிளான்ஸா 2322 யூனிட்டுகளும், மாருதி எக்ஸ்எல்6 2356 யூனிட்டுகளும் மற்றும் ரெனோ ட்ரைபர் கார் விற்பனை எண்ணிக்கை 2,490 ஆக பதிவு செய்துள்ளது. அடுத்ததாக, முதல் மாதத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனை எண்ணிக்கை 6,236 ஆக பதிவு செய்துள்ளது.

hyundai venue

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2019

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் ஆகஸ்ட் 2019
1. மாருதி சுசூகி டிசையர் 13,724
2. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 12,444
3. மாருதி சுசூகி வேகன்ஆர் 11,402
4. மாருதி சுசூகி பலேனோ 11,067
5. மாருதி சுசூகி ஆல்டோ 10,123
6. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 9,403
7. ஹூண்டாய் வென்யூ 9,342
8 மாருதி சுசூகி  ஈக்கோ 8,658
9. மாருதி சுசூகி எர்டிகா 8,391
10. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 7,109