கொரோனா வைரஸ் : தினமும் ரூ.1500 கோடி வருவாய் இழப்பு நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடல்..!

0

2020 Maruti Dzire facelift

இந்தியாவில் பரவலாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

Google News

குறிப்பாக ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கரோனா வைரஸ் பீதியால் தனது அனைத்து ஆலையிலும் பணியாளர் பாதுகாப்பினை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்தி வைத்துள்ளது.

கோவிட்-19 பாதிப்புகளால் ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் மகாராஷ்டிரா ஆலை மூடப்பட்டுள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆலைகளில் நாக்பூர், சக்கன் மற்றும் கண்டிவளி ஆகிய இடங்கள் மூடப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்ஸ், ஹோண்டா டூ வீலர்ஸ், ஃபோர்ஸ் மோட்டார்ஸ், டொயோட்டா ஃபோக்ஸ்வாகன், ஜேசிபி, பஜாஜ் ஆட்டோ, சுசுகி மோட்டார்சைக்கிள், டாடா மோட்டார்ஸ், ஐஷர், ராயல் என்ஃபீல்டு, வால்வோ இந்தியா, அசோக் லேலண்ட் மெர்சிடிஸ் பென்ஸ், போர்டு இந்தியா, யமஹா மோட்டார் இந்தியா, கியா மோட்டார்ஸ் இந்தியா, பிஎம்டபிள்யூ இந்தியா, ரெனால்ட்-நிசான், எம்ஜி மோட்டார் மற்றும் மாருதி சுசுகி நிறுவனமும் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளது. குறிப்பாக சுசூகியின் குருகிராம் மற்றும் மானசேர் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையினால் மட்டும் நாள் ஒன்றுக்கு உற்பத்தி நிறுத்தப்படுவதனால், ரூ.1,300 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை இழப்பீடு ஏற்படும் என்பதனால் அடுத்த 10 நாட்களில் சுமார் ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என இடி ஆட்டோ குறிப்பிடுகின்றது.

மேலும், இந்தியா ஆட்டோமொபைல் டீலர்கள் சம்மேளம், இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சம்மேளனமும், நாடு முழுவதும் உள்ள உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களும் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. பல நிறுவனங்களின் உற்பத்தி விரைவில் நிறுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து இந்த பகுதியில் மற்ற நிறுவனங்களின் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தம் பற்றி அறிவிப்புகளை அறிந்து கொள்ளலாம்.