டுகாட்டி லிங்க் ஸ்மார்ட்போன் ஆப் அறிமுகம்

0

பிரசத்தி பெற்ற டுகாட்டி மோட்டார் நிறுவனம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் செயல்படுகின்ற பிரத்தியேகமான டுகாட்டி லிங்க் செயலியை தனது டுகாட்டி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

டுகாட்டி லிங்க்

மிலன் நகரைச் சேர்ந்த  e-Novia மென்பொருள் நிறுவனம் துனையுடன் டுகாட்டி இணைந்து உருவாக்கியுள்ள டுகாட்டி லிங்க் செயலி மிக சிறப்பான வகையில் தனது வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான அமைப்பினை ஏற்படுத்த நவீன தலைமுறையினருக்கு ஏற்றதாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Google News

மொபைலில் ஆப்பினை இன்ஸ்டால் செய்த பின்னர் ப்ளூடுத் வாயிலாக ஈசியூ மூலம் இணைக்கப்பட்ட பின்னர் வாகனத்தின் நிலைப்புத் தன்மை, பவர் , திராட்டிள் ரெஸ்பான்ஸ், ஆகியவற்றுடன் பயணம் மேற்கொள்ள உதவும் புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் போன்றவற்றை பெற்று உதவுகின்றது.

இந்த செயலி வாயிலாக ரைட்ர் தனது தேவைக்கேற்ப ரைடிங் மோ, ஏபிஎஸ், டிகாட்டி டிராக்‌ஷன் கன்ட்ரோல் ஆகியவற்றை மாற்றியமைக்க இயலும். கூடுதலாக அடுத்த சர்வீஸ் தேதி விபரங்கள் போன்றவை அமைந்துள்ளது. முதற்கட்டமாக டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக்கிற்கு கிடைக்க தொடங்கியுள்ள இந்த வசதி மற்ற மாடல்களுக்கு விரைவில் கிடைக்கும். வெளிநாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் இந்திய சந்தையிலும் கிடைக்க தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.