ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு : ஜிஎஸ்டி

0

வருகின்ற ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை தொடர்ந்து அதற்கு முன்பாக மோட்டார் தயாரிப்பார்கள் சலுகைகளை வழங்க தொடங்கி உள்ள நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள்

ஐஷர் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஜூன் 17ந் தேதி முதல் தங்களுடைய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு ஜிஎஸ்டி விலை சலுகையை அறிவித்துள்ளது. என்ஃபீல்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மாடல்கள் வாரியாக எவ்வளவு குறைக்கப்படும் போன்ற விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Google News

சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தன்னுடைய மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 4,500 வரை விலை சலுகையை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுதவிர மற்ற மோட்டார் வாகன தயாரிப்பாளர்களும் ஜிஎஸ்டி வருகைக்கு முந்தைய சலுகைகளை வழங்குவார்கள்.

royal enfield cafe racer

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வருகையால் 350சிசி திறனுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 28 சதவிகித அனடிப்படை வரியிலிருந்து கூடுதலாக மூன்று  சதவிகிதம் விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளதால் 350சிசி திறனுக்கு கூடுதலான ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஜூலை 1 முதல் விலை உயரக்கூடும்.

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.

ஜிஎஸ்டி தொடர்பான  கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.

royal enfield despatch rider 1

ஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும்  சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டை சார்ந்த டிராக்டர்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.