கார், பைக் விலை உயருமா ? – ஜிஎஸ்டி வரி

0

வருகின்ற ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் மோட்டார் வாகன துறை 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

auto gst

Google News

ஜிஎஸ்டி – மோட்டார்

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான  கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.

ஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும்  சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

renault kwid 1.0l

ஜிஎஸ்டி ஆட்டோ வரி விதிப்பு – முழுவிபரம்

  • 4 மீட்டருக்கு குறைவான சிறிய ரக கார்கள்  1200சிசி எஞ்சினுக்கு உட்பட்ட பிரிவில் உள்ள பெட்ரோல் கார்கள் 28 சதவிகித வரி கூடுதலாக 1 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளதால் சிறிய பெட்ரோல் கார்கள் விலை உயரும்.
  • சிறிய ரக டீசல் கார்கள் 1500 cc  எஞ்சினுக்கு உட்பட்ட பிரிவில் உள்ள மாடல்களுக்கு மூன்று சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பலனை அடைய உள்ள பிரிவாக இது விளங்கும், சிறிய கார்களை தவிர மற்ற மாடல்களான எஸ்யூவி, சொகுசு கார்கள், வேன் மற்றும் பஸ் 10 நபர்களுக்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு  28 சதவிகித வரியுடன் கூடுதலாக 15 சதவிகிதம் விதிக்கப்பட்டாலும் 43 சதவிகிதமே வரும் ஆனால் நடைமுறையில் உள்ள வரிவிதிப்பின்படி 41.5 முதல் 44.5 சதவிகிதம் உள்ளதால் இதன் விலை கனிசமாக குறையும்.
  • 1500சிசி க்கு மேற்பட்ட ஹைபிரிட் கார்களுக்கும் 15 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • மோட்டார் சைக்கிள் பிரிவில் 350 சிசி திறனுக்கு மேற்பட்ட மாடல்களுக்கு 3 சதவிகிதம் கூடுதலாக விதிகப்பட்டுள்ளதால் 31 சதவிகிதமாக உயரும்.

2016 Royal Enfield Classic 500 Squadron Blue

தற்பொழுது உள்ள விரி விதிப்பின்படி நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களுக்கு 25 % முதல் 55 % வரை விதிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது சிறிய ரக கார்களுக்கு ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் பொழுது வரி அதிகரிக்கும் என்பதனால் சிறிய கார்கள் வாங்கும் நடுத்தரவர்கத்தினருக்கு பெரும் சுமையாக அமையும் என கருதப்படுகின்றது. இந்த முறை நடைமுறைக்கு வரும்பொழுது எஸ்யூவி , யூட்டிலிட்டி ரக வாகனங்கள் , சொகுசு கார்கள் விலை சற்று குறையலாம், இதுதவிர உதிரிபாகங்களுக்கு 28 சதவிகிதம் என குறிப்பிடப்படுவதனால் இதன் விலை உயரலாம்..

நாடு முழுவதும் இருசக்கர வாகன பிரிவுக்கு தற்பொழுது 28 – 35 %  வரையிலான வரிவிதிப்பை பெற்று வருகின்ற நிலையில் 350சிசி க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 3 சதவிகித கூடுதல் என்பதனால் 31 சதவிகத வரியை பெறும் என்பதனால் இந்த பைக்குகளின் விலை உயரும்.