விற்பனையில் சரித்திர சாதனையை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்

0

Hero Splendor Black And Accent

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது மாதந்திர விற்பனை எண்ணிக்கையில் முதன்முறையாக 806,848 இரு சக்கர வாகனங்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

Google News

இந்நிறுவன வரலாற்றில் முதன்முறையாக 8 லட்சத்திற்க்கும் கூடுதலான மாதந்திர விற்பனையை பதிவு செய்துள்ள நிலையில், முந்தைய அக்டோபர் 2019 ஆண்டுடன் ஒப்பீடுகையில் 35 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் 2019-ல் 599,248 ஆக பதிவு செய்திருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், அக்டோபர் 2020-ல் உள்நாட்டு விற்பனை 34.7 சதவீதம் அதிகரித்து 791,137 யூனிட்டுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி ஒட்டுமொத்த அளவுகளில் 28.14 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஹீரோ கடந்த மாதம் 15,711 இருசக்கர வாகனங்களை அனுப்பியது. ஒரு வருடத்திற்கு முன்பு 12,260 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்திருந்தது.

2020 அக்டோபரில் ஹீரோவின் 732,498 ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 32.53 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கிடையில், ஸ்கூட்டர் விற்பனை கடந்த மாதம் 74,350 ஆக இருந்தது. இது 2019 அக்டோபரில் விற்கப்பட்ட 46,576 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 59.63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

hero motocorp sales oct 2020

Hero Pleasure plus Platinum

Web title : Hero Motocorp achieves Record Sales of over 8 lakh milestone