அதிக விற்பனையால் ஹோண்டாவின் லாபம் உயர்ந்தது

0

சமீபத்திய காலாண்டில் ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷன் லாபம்  17.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கு காரணம், ஆசியாவில் மோட்டார்சைக்கிள்  விற்பனையும், வட அமெரிக்காவில் வாகன விற்பனையுமே காரணம் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.     

ஜப்பானை சேர்ந்த வாகனதயாரிப்பு நிறுவனமான ஹோண்டா  வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில்  நிறுவனத்தின் வருவாய் 244.3 பில்லியன் யென் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு வருவாயான  207.3 பில்லியன் யென் – ஐ விட அதிகமாகும். விற்பனை 8.4 சதவிகிதம் உயர்ந்து 4.0 டிரில்லியன் யென் ஆகியுள்ளது.  

Google News

வட  அமெரிக்காவில் 5 லட்சத்து 18 ஆயிரம் வாகனங்கள்  விற்பனை ஆகி, 7.7 சதவிகித விற்பனை உயர்வை அளித்துள்ளது.  இது ஹோண்டா பைலட்  மிட் சைஸ் SUV அதிகமாக விற்பனையானதால் கிடைத்த உயர்வாகும் . உலக அளவில் வாகன விற்பனை 3 சதவிகிதம் உயர்ந்து 1.3 மில்லியனாக உள்ளது .

இந்தோனேசியா, இந்தியா மற்றும் வியட்நாம்  ஆகிய நாடுகளில் மொத்த மோட்டார் சைக்கிள் விற்பனை 13.9 சதவிகிதமாக உயர்ந்து 5.35 மில்லியன் யூனிட்களாக உள்ளது. ஆசிய நாடுகளில் ஹோண்டா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் இது 90 சதவிகிதமாகும்.