ரூ.10 லட்சத்துக்குள் மின்சார காரை வெளியிட ஹூண்டாய் முடிவு

0

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி

குறைவான விலை கொண்ட தொடக்கநிலை மின்சார கார் மாடலை வெளியிடுவதற்கான முயற்சியை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், இந்நிறுவனம் ரூ.25.30 லட்சம் விலையில் ஹூண்டாய் கோனா என்ற க்ராஸ்ஓவர் ரக மின்சார எஸ்யூவி காரை வெளியிட்டுள்ளது.

Google News

இந்தியாவில் பரவலாக எலெகட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக குறைவான விலை கொண்ட மின்சார கார்களில் மஹிந்திரா இவெரிட்டோ மற்றும் டாடா டிகோர் EV ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தனது சென்னை ஆலையில் மின்சாரத்தில் இயங்கும் குறைந்த விலை காரை தயாரிப்பதற்கு ரூ.2000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்பதனால், குறைவான விலை கொண்டிருப்பதுடன் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

ஹூண்டாய் இந்தியா தலைவர் எஸ்.எஸ். கிம், அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் முற்றிலும் புதிய மற்றும் வித்தியாசமான மின்சார் கார் தயாரிப்பை தீர்மானிக்க ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம், இது இந்தியாவுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட காராக இருக்கும்” மேலும், இந்த காரின் விலை ரூபாய் 10 லட்சத்துக்குள் அமைந்திருக்கும்.

மேலும் பேசுகையில், ” குறைவான விலையில் மின்சார கார்களை எதிர்பார்க்கின்ற பொது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையை நாங்கள் கொண்டு வர விரும்புகின்றோம், என்று கிம் கூறினார்.

முன்பாக வெளிவந்த அறிக்கையில், ஹூண்டாய் இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான வாய்ப்பைப் பற்றி ஆலோசித்து வருகிறது, இந்த ஆலையில் அதன் எதிர்கால மின்சார வாகனங்கள் அனைத்திற்கும் பயன்படுத்தப்படுத்தவதற்கு கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களான எல்ஜி, சாம்சங் SDI மற்றும் SK Innovations உட்பட சில சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ள முதல் ஹூண்டாய் எலெக்ட்ரிக் ‘ஸ்மார்ட் EV’ திட்டத்தின் முதல் தயாரிப்பு விற்பனைக்கு வர 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும்.

நன்றி – TOI