ஜனவரி 1, 2018 முதல் ஹூண்டாய் கார் விலை 2 % உயருகின்றது

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஹூண்டாய் கார் விலை அதிகரிப்பு

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ரூ.3.29 லட்சம் ஆரம்ப விலை கொண்ட இயான் கார் முதல் அதிகபட்சமாக ரூ.25.19 லட்சம் விலை கொண்ட ஹூண்டாய் டூஸான் கார் வரை விலையை அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு குறித்து ஹூண்டாய் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 2 சதவீதம் வரை விலை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் நிசான், மஹிந்திரா, வோல்ஸ்வேகன், மாருதி சுசூகி இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், ஹோண்டா கார்ஸ் இந்தியா, ஸ்கோடா மற்றும் இசுசூ போன்ற நிறுவனங்கள் தங்களுடைய மாடல்களின் விலையை கனிசமாக உயர்த்தியுள்ளது.

வருகின்ற ஜனவரி 1, 2018 முதல் விலை உயர்வை அமலுக்கு வரவுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

Recommended For You