இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி

0

Mahindra ford allianceஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி மோட்டார் வாகன தயாரிப்பாளரராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சந்தைகளில் ஃபோர்டு மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது.

மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி

இந்தியாவில் மிகச் சிறப்பான வகையில் பல்வேறு விதமான சேவைகள் நாடு முழுவதும் வழங்கி வருகின்ற இந்நிறுவனத்துடன், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சேவைகளை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ளவும், மஹிந்திரா வாயிலாக இந்தியாவில் ஃபோர்டு சேவைகளை விரிவுப்படுத்துவதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி , மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போது அறிவிக்கப்படலாம்.

இந்த கூட்டணியின் நோக்கங்கள் பின்வருமாறு ;-

1. மின்சார கார் துறை

2. வாகனத்தின் கனெக்டேட் நுட்பம்

3. மொபைலிட்டி ப்ரோகிராம்

4. ஃபோர்டு சேவைகள் இந்தியாவில் அதிகரிக்கவும்

5. மஹிந்திரா சேவைகள் சர்வதேச அளவில் அதிகரிக்கவும்

6. புதிய மாடல்கள் உருவாக்குவதற்கு மற்றும்

7. வணிகரீதியான மற்றும் வளம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளப்படும்.

மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் துறையில் சந்தை மதிப்பை பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனமாக விளங்கும் நிலையில், இதுனுடைய பொருட்களை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தவும், இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கவும் மஹிந்திராவை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு இந்தியாவில் (சென்னை) நுழைந்த முதல் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியா நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்துடன் இணைந்து தொடங்கியது , அதன்பிறகு இந்த கூட்டணி 2005 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் 1926 முதல் 1954 ஆம் ஆண்டு வரையிலான ஃபோர்டு இந்தியா நுழைவின் போதும் இந்த கூட்டணி இயங்கியது.