3 மின்சார எஸ்யூவி கார்களை களமிறக்கும் மஹிந்திரா

இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா எலெக்ட்ரிக் பிரிவு மூன்று மின்சார எஸ்யூவி கார்களை 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மின்சார எஸ்யூவி

mahindra kuv100 nxt suv

வரும் 2030 ஆம் ஆண்டு முதல் நான்கு சக்கர வாகனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தீவரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

சமீபத்தில் நார்வே தூதரகம் சார்பில் நடைபெற்ற electric vehicles and green shipping என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவு சிஇஓ மகேஷ் பாபு குறிப்பிடுகையில் ‘ இந்திய அரசு கடந்த 6 மாதங்களாக மின்சாரத்தில் இயங்கும் கார்களை களமிறக்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் நிலையில், 2030 முதல் மின்சார வாகனங்கள் என்ற இலக்கை நோக்கிய பயணம் மிகவும் சிறப்பான முயற்சியாகும்.

3 மின்சார எஸ்யூவி

மஹிந்திரா எலக்ட்ரிக் வாகன பிரிவு 250 கிமீ முதல் 350 கிமீ வரையிலான தொலைவை சிங்கிள் சார்ஜ் மூலம் பயணிக்கும் வகையிலான வாகனங்களை 2018 ஆம் ஆண்டு இறுதி முதல் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

2017 mahindra kuv100

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி அடிப்படையிலான மின்சார எஸ்யூவி அதிகபட்சமாக மணிக்கு 186 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கிமீ ( EPA’s-Environmental Protection Agency test) தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. 0 – 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

அடுத்த இரண்டாவது மாடலாக டிவோலி அடிப்படையில் தயாராகி வரும் எஸ்யூவி மாடலில் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ( NEDC – New European Driving Cycle test) தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. 0 – 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 11 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

SsangYong Tivoli

மூன்றாவது எஸ்யூவி மாடல் கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி500 அடிப்படையில் எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் மாடல் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 190 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ ( NEDC – New European Driving Cycle test) தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. 0 – 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

mahindra xuv aero

இந்நிறுவனம் உயர் தர தொழிற்துட்பத்தில் அதிக தொலைவு பயணிக்கும் வகையிலான பேட்டரி மற்றும் நுட்பங்களை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.