மாருதியின் செலிரியோ கார் விற்பனையில் சாதனை

0

மாருதி செலிரியோ கார்

தொடக்க நிலை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசூகி செலிரியோ கார் கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டில் விற்பனை எண்ணிக்கை 103,734 பதிவு செய்து புதியதொரு சாதனையை படைத்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டை விட 10 சதவீத வளர்ச்சியாகும்.

Google News

கடந்த 2014 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட செலிரியோ காரின் மொத்த விற்பனை எண்ணிக்கை  4.7 லட்சம் கார்களை கடந்த 5 ஆண்டு காலத்தில் மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

செலிரியோ காரினை பற்றி சில முக்கிய தகவல்கள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதியின் செலிரியோ காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 67 bhp குதிரைத்திறன், 90 Nm முறுக்கு விசை வெளிப்படுத்துகிறது. இதன் சிஎன்ஜி மாடலானது 58 bhp குதிரைத்திறன், 78 Nm முறுக்கு விசை திறனையும் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 வேக ஏஎம்டி தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இந்த காரின் மைலேஜ் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி  மாடல்கள் லிட்டருக்கு 23.1 கிமீ தரவல்லதாகும். சிஎன்ஜி பொருத்தப்பட்ட வேரியன்ட் மைலேஜ் கிலோவுக்கு 31.79 கிமீ ஆகும்.

இந்தியாவின் முதல் ஏஎம்டி அல்லது மாருதி ஏஜிஎஸ் பெற்றதாக அறியப்படுகின்ற இந்த மாடலின் மொத்த விற்பனையில் ஏஎம்டி வேரியண்ட் மட்டும் 31 சதவீத வாடிக்கையாளர்களும், ZXi டாப் வேரியண்ட்டை 52 சதவீத வாடிக்கையாளர்களும், சிஎன்ஜி வேரியண்of 20 சதவீத வாடிக்கையாளர்களும் தேர்வு செய்துள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நான்கு சக்கரங்கள் பெற்ற வாகனங்களில் உள்ள அடிப்படையான பாதுகாப்பு வசதிகளான ஓட்டுனருக்கான காற்றுப்பை, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், இருக்கை பட்டைக்கான நினைவூட்டல் உள்ளிட்ட வசதிகளை கொண்ட மாருதி செலிரியோ காரின் ஆரம்ப விலை ரூ.4.40 லட்சம் ஆகும்.