மாருதி சுசூகி கார் விற்பனை நிலவரம் : செப்டம்பர் 2017

இந்தியாவின் முதன்மையான மோட்டார் வாகன கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் செப்டம்பர் 2017 மாத முடிவில் 1,51,400 கார்களை விற்பனை செய்துள்ளது.

கார் விற்பனை நிலவரம் – செப்டம்பர் 2017

முந்தைய வருடத்தின் செப்டம்பர் மாத விற்பனை நிலவரத்துடன் ஒப்பீடுகையில் இந்நிறுவனம் 9.3 சதவீதம் வளர்ச்சி பெற்று மொத்தம் உள்நாடு மற்றும் வெளிநாடு விற்பனையில் 1, 63,071 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

முந்தைய நிதி வருடத்தின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுடன் ஒப்பீடுகையில் உள்நாட்டில் 15.6 சதவீதம் வளர்ச்சி பெற்று மொத்தம் 886,689  கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் 6 மாதங்களில் 825,832 கார்களை விற்பனை செய்திருந்தது.

தொடக்கநிலையில் சந்தையில் உள்ள ஆல்டோ மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்களின் விற்பனை 13.3 சதவீதம் வரை முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. காம்பேக்ட் ரக பிரிவில் உள்ள இக்னிஸ் பலேனோ, டிசையர், ஸ்விஃப்ட்,ரிட்ஸ் மற்றும் செலிரியோ ஆகிய மாடல்கள் 44.7 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளன.

யுட்டிலிட்டி ரக வேன் மற்றும் எஸ்யூவி மாடல்களும் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் நடுத்தர ரக செடான் பிரிவில் உள்ள சியாஸ் மாடல் 14.4 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

மாருதி முழு விற்பனை பட்டியலை கீழே உள்ள படத்தில் காணலாம்.

Recommended For You