2.3 % வளர்ச்சி அடைந்த மாருதி சுசுகி கார் விற்பனை நிலவரம் – அக்டோபர் 2019

maruti-suzuki-s-presso

நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி அக்டோபர் மாத விற்பனையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனையில் 2.3 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆண்டில் முதன்முறையாக பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகன விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக இந்நிறுவனத்தின் யுட்டிலிட்டி வாகன சந்தையின் வளர்ச்சி சீராகவும், காம்பாக்ட் ரக கார்களின் பிரிவும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் சியாஸ் காரின் விற்பனை 39.1 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக புதிய அறிமுகமான மாருதி எஸ்-பிரெஸ்ஸோ அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக , டிசையர், பலேனோ உள்ளிட்ட மாடல்களுடன் ஈக்கோ வேன் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 135,948 வாகனங்களாக இருந்த விற்பனை இந்த ஆண்டின் கடந்த மாதத்தில் 139,121 ஆக அதிகரித்து உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 2.3 % வளர்ச்சி பெற்றுள்ளது. அதேநேரம் இந்நிறுவனத்தின் சுசுகி சூப்பர் கேரி டிரக் விற்பனை எண்ணிக்கை 2429 ஆக உள்ளது. டொயோட்டா நிறுவனத்திற்கு 2,727 கிளான்ஸா கார்களையும், ஏற்றுமதி சந்தையில் 9158 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி சுசுகி முழு விற்பனை அட்டவனை – அக்டோபர் 2019

Maruti Suzuki sales in October 2019