மாருதி சுசுகி கார் விற்பனை 5 % வளர்ச்சி பெற்றுள்ளது – ஜனவரி 2018

0

2018 Maruti Swiftஇந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுசுகி இந்தியா, கடந்த ஜனவரி மாதம் மொத்தமாக 1,51,351 வாகனங்களை விற்பனை செய்து 5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

மாருதி சுசுகி கார் விற்பனை நிலவரம்

Maruti Celerio X

Google News

கடந்த ஜனவரி 2017யில் மாருதி சுசூகி நிறுவனம், மொத்தமாக 144,396 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி 2018யில் மொத்தமாக 1,51,351 அலகுகள் விற்பனை செய்துள்ளது.

இவற்றில் உள்நாட்டில் மட்டும், 140,600 அலகுகள் விற்பனை செய்துள்ள நிலையில் ஏற்றுமதி சந்தையில் சுமார் 10,751 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற யுட்டிலிட்டி வாகன சந்தை மாடல்களான பிரெஸ்ஸா,ஜிப்ஸி,எர்டிகா, எஸ்- கிராஸ் போன்ற மாடல்கள் 20693 அலகுகளும், காம்பேக்ட் ரக மாடல்களின் விற்பனை 67868 கார்களாகவும் உள்ளது.

ஆம்னி, ஈக்கோ, வேகன் ஆர் மற்றும் ஆல்டோ ஆகிய கார்கள் விற்பனையுல் சரிவை கண்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் இலகுரக வர்த்தக வாகனமாக விளங்கும் சூப்பர் கேரி மினி டிரக் 1411 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது.

2017 Maruti S Cross front

Maruti Suzuki Super Carry