ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை நிலவரம் -மார்ச் 2018

0

உலகின் மிக நீண்டகாலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 350சிசி நடுத்தர சந்தையில் அதிகப்படியான பைக்குகளை விற்பனை செய்கின்ற என்ஃபீல்டு நிறுவனம் 76,087 அலகுகளை மார்ச் 2018-யில் விற்பனை செய்துள்ளது.

 ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலவரம்

இந்திய இருசக்கர மோட்டார் வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக விளங்கும் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் , கடந்த மார்ச் 2018 மாதந்திர இறுதியில் 76,087 அலகுகளை விற்பனை செய்துள்ள நிலையில் கடந்த மார்ச் 2017யில் 60,113 அலகுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டில் 27 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

Google News

2017-2018 ஆம் நிதி ஆண்டில் மொத்தமாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தை ஆக மொத்தமாக 820,492 அலகுகளை விற்பனை செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 23 சதவீத வளர்ச்சியாகும். கடந்த 2016-2017 நிதி ஆண்டில் 666,490 அலகுகளை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த நிதி ஆண்டை விட ஏற்றுமதி சந்தையிலும் என்ஃபீல்டு சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக 2016-2017 நிதி வருடத்தில், 15,383 இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், 2017-2018 ஆம் ஆண்டில் 19,262 வாகனங்களை ஏற்றுமதி செய்து 25 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த நிதி வருடத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது.