ரூ. 700 கோடி முதலீடு செய்யும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350, 500

நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையின் நாயகனாக தகிழும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், ரூ.700 கோடி முதலீட்டில் விரிவாக்க பணிகள் மற்றும் உற்பத்தி எண்ணிக்கையை 9.50 லட்சம் மோட்டார்சைக்கிள்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வாகன காப்பீடு, ஏபிஎஸ் மேம்பாடு போன்ற காரணங்களால் அதிகரித்து வரும் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விலையினால் இந்நிறுவன விற்பனை சரிவடைய தொடங்கியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டில் என்ஃபீல்டு நிறுவனம், உள்நாட்டில் 1 சதவீத வளரச்சியை பதிவு செய்து 805,273 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 801,230 யூனிட்டுகள் விற்றிருந்தது.

நடப்பு நிதியாண்டில் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்சாலை வல்லம் வடகல் ஆலையில் இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணிகள் மற்றும் டெக்கனிகல் மையம் போன்றவற்றை விரிவாக்கம் செய்து வருகின்றது. மேலும் இந்த வருடத்தில் 9.50 லட்சம் பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இதுதவிர இந்நிறுவனம், தாய்லாந்து நாட்டில் பிரத்தியேகமான தனது முழுமையான 100 சதவீத நேரடி முதலீட்டில் என்ஃபீல்டு மாடல்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்ய உள்ளது.

வரும் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட என்ஜின்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கிளாசிக் மற்றும் தண்டர்பேர்ட் வரிசை மோட்டார்சைக்கிள்களுக்கு என பல்வேறு விரிவாக்க பணிகளுக்கு என இந்நிறுவனம் ரூபாய் 700 கோடி முதலீட்டை பயன்படுத்த உள்ளது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே.தாசரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிங்க- என்ஃபீல்டின் புல்லட் டிரையல்ஸ் பைக் விலை விபரம்