ஸ்விஃப்ட் முதல் ஐ20 வரை.., விற்பனையில் டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2020

0

all new creta

இந்தியாவில் கோவிட்-19 ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி சீராக அதிகரிக்க துவங்கியுள்ளது. முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை 22,643 ஆக பதிவு செய்துள்ளது. விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை தொடர்ந்து காணலாம்.

Google News

சமீபத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட கியா சொனெட் எஸ்யூவி 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பாக்ட் சந்தையில் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையாக 9266 ஆக பதிவு செய்துள்ளது. அடுத்தப்படியாக விட்டாரா பிரெஸ்ஸா 9,153 எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளது.

மொத்தமுள்ள 10 இடங்களில் 7 இடங்களை மாருதியும், 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. ஸ்விஃப்ட் காரின் விற்பனை கடந்த செப்டம்பர் 2019 உடன் ஒப்பீடுகையில் 75 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – செப்டம்பர் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் செப்டம்பர் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 22,643
2 மாருதி பலேனோ 19,433
3 மாருதி ஆல்டோ 18,246
4 மாருதி வேகன் ஆர் 17,581
5 மாருதி டிசையர் 12,325
6 ஹூண்டாய் கிரெட்டா 12,235
7 மாருதி ஈக்கோ 11,220
8 ஹூண்டாய் கிரான்ட் i10 Nios 10,385
9 மாருதி எர்டிகா 9,982
10 ஹூண்டாய் எலைட் ஐ20 9,852