மே 2019 விற்பனையில் டாப் 10 கார்களில் 8 கார்கள் மாருதியின் கார்கள்

0

2019-maruti-suzuki-Baleno-RS

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை சரிந்துள்ள நிலையில், டாப் 10 கார்கள் விற்பனை பட்டியலில் மே மாதம் 2019 நிலவரப்படி 10 கார்களில் 8 கார்கள் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்துடையதாகும்.

Google News

பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் மே மாத விற்பனையில் மிகப்பெரும் அளவில் சரிவினை பெற்றிருக்கின்றனர். மாதந்திர விற்பனை எண்ணிக்கையில் 20,000 கார்கள் இலக்கை எந்த காரும் மே மாதம் கடக்கவில்லை. அதிகபட்சமாக ஸ்விஃப்ட் கார் 17,039 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

டாப் 10 கார்கள் – மே 2019

கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து இந்திய ஆட்டோமொபைல் சந்தை தொடர் சரிவினை சந்தித்து வரும் நிலையில், மே மாதம் முடிவில் பெருமளவில் மாருதி நிறுவன விற்பனை சரிந்திருந்தது.

அதிகம் விற்பனை ஆகின்ற மாருதி ஆல்ட்டோ விற்பனை மே 2018 மாதத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் 16,394 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை ஆகியுள்ளது. ஆம்னி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மாருதி ஈக்கோ விற்பனை கனிசமாக உயர்ந்துள்ளது.

hyundai venue

சமீபத்தில் வெளியிடப்பட்ட வெனியூ எஸ்யூவி கார் முதல் மாதம் 7,000 எண்ணிக்கை பதிவு செய்துள்ள நிலையில், பிரபலமான விட்டாரா பிரெஸ்ஸா விற்பனை பெருமளவு சரிந்துள்ளது. டாப் 10 கார்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா, எலைட் ஐ20 மட்டும் இடம்பிடித்துள்ளது. கிராண்ட் ஐ10 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.

டாப் 10 கார்கள் – மே 2019 முழு அட்டவனை

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் மே 2019
1. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 17,039
2. மாருதி சுசூகி ஆல்டோ 16,394
3. மாருதி சுசூகி டிசையர் 16,196
4. மாருதி சுசூகி பலேனோ 15,176
5. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,561
6. மாருதி சுசூகி ஈக்கோ 11,739
7. ஹூண்டாய் க்ரெட்டா 9,054
8 ஹூண்டாய் எலைட் ஐ20 8,958
9. மாருதி சுசுகி எர்டிகா 8,864
10. மாருதி சுசூகி  விட்டாரா பிரெஸ்ஸா 8,781

 

2019-Maruti-Suzuki-Alto