டொயோட்டா கார்கள் விலை 3 % உயருகின்றது

0

2017 Toyota Etios Cross X Editionடொயோட்டா கிரிலோஸ்கர் இந்தியா நிறுவனம் ஜனவரி மாதத்திலிருந்து 3 சதவீதம் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களுக்கும் விலை உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா கார்கள் விலை

toyota innova touring sport front

Google News

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஃபார்ச்சூனர்,இன்னோவா க்ரிஸ்டா எட்டியோஸ், லிவா உட்பட கரோல்லா , பிரையஸ் மற்றும் கேம்ரி ஆகிய மாடல்களின் விலை உயரவுள்ளது.

விலை உயர்வு குறித்து டொயோட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாறி வரும் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்பவும், உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு விலையை அதிகரிக்க பரிசீலனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இருப்பில் உள்ள கார்களை விற்பனை செய்யும் நோக்கில் டிசம்பர் 31, 2017 வரை Remember December Campaign என்ற பெயரில் அதிகபட்சமாக ரூ.90,000 விலை சலுகை உட்பட குறைந்தபட்ச 4.99 சதவீத கடன் திட்டம் மற்றும் பல்வேறு சிறப்பு இஎம்ஐ திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜனவரி 1, 2018 முதல் விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

2017 toyota corolla altis car 2016 Toyota Innova