ஹெல்மெட் எவ்ளோ அவசியங்கறது எல்லாருக்கும் தெரியும் ஆனால் இருந்தாலும் கூட பலரும் நம்ம ஹெல்மெட் பயன்படுத்துவது கிடையாது சரி அதை விடுங்க ஒரு பக்கம் இருக்கட்டும் நாம வாங்குற ஹெல்மெட்ல என்ன என்ன டெஸ்ட் பண்ணுவாங்க, மேலும் இந்த டெஸ்ட் முறைகளின் அடிப்படையில் எந்த ஹெல்மெட் மிகவும் பாதுகாப்பானது மற்றும் எந்த சர்டிபிகேட் பெற்ற ஹெல்மெட்டை வாங்கலாம் என்பது பற்றி தற்பொழுது சுருக்கமாக அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இந்தியாவில் ISI , அமெரிக்காவின் DOT, ஐரோப்பாவின் ECE, SHARP ஆனது இங்கிலாந்தில் உள்ள நடைமுறை மற்றும் SNELL எனப்படுகின்ற தன்னார்வ அமைப்பின் மூலம் சோதனை செய்யப்படும் தலைகவசத்துக்கான சான்றிதழ், இறுதியாக ரேசிங் பயன்பாடுகளுக்கு ஏற்ற FIM ஆகும்
ISI Certified Helmets
இந்திய சாலைகளில் பொதுவா நம்ம பயணிக்கும் போது கட்டாயம் வந்து ISI தரச் சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் வந்து பயன்படுத்தணும் அப்படிங்கறது அடிப்படையான விதியாகவே இருக்கு அப்படி இருக்கும்பொழுது, ஐஎஸ்ஐ சான்றிதழ் பெறுவதற்கு Bureau of Indian Standards (BIS) மூலமாக ஹெல்மெட் சோதனை செய்வாங்க, அதுல பெனட்ரேட் டெஸ்ட் ( penetration) எனப்படுகின்ற ஆணி போன்ற கூரான கருவிகள் ஊடுருவி செல்கின்றதா? ஏன் அதனை தடுக்கும் திறனை பெற்றிருக்கின்றதா என்பதை தான் இந்த டெஸ்ட்ல செய்வாங்க, அடுத்து பாத்தீங்கன்னா மோதலை அதாவது வலுவான மோதலை ( impact absorption test) தாக்குப் பிடிக்கும் அளவு ஹெல்மெட் வலுவானதாக உள்ளதா என்பதை சோதனை செய்யும் ஒரு சோதனை இந்த இரண்டு என்றால் இந்தியாவுடைய ஐஎஸ்ஐ அமைப்பு சோதனை செய்து தரச் சான்றிதழ் வழங்குகிறார்கள்.
DOT Certified Helmets
பிரபலமாக உள்ள பெரும்பாலான தலைகவசங்களில் உள்ள DOT சான்றிதழ் பெற ஐஎஸ்ஐ போல ஊடுருவல், வலுவான மோதலை தடுக்கும் சோதனை மட்டுமல்லாமல் கூடுதலாக ஹெல்மெட் ஸ்டிரிப் வலுவாக உள்ளதை சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்குகின்றது.
ECE Certified Helmets
அமெரிக்காவின் DOT போலவே ஆய்வகங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்ற Economic Commission for Europe ஹெல்மெட் சான்றிதழ் 50க்கு மேற்பட்ட ஐரோப்பாவின் நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஊடுருவல், வலுவான மோதலை தடுக்கும் சோதனை மற்றும் ஹெல்மெட் ஸ்டிரிப் சோதனை செய்யப்படுகின்றது.
SHARP Certified Helmets
இங்கிலாந்தின் ஹெல்மெட் தரச் சான்றிதழ் முறையான Safety Helmet Assessment and Rating Programme மூலம் 1 முதல் 5 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்படும் நிலையில், இந்த ஹெல்மெட் சோதனையில் நிகழ் நேரத்தில் சிறப்பான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
SNELL Certified Helmets
மேலே உள்ள மற்ற ஹெல்மெட் போல அடிப்படையான பாதுகாப்புகளை கடந்து கூடுதலாக, நெருப்பினை தாங்கும் திறன், முன்பக்கத்தில் உள்ள ஹெல்மெட்டின் கண்ணாடியை சோதனைக்கு உட்படுத்துவது, தாடைப் பகுதியை பாதுகாக்கின்றதா என பல்வேறு சோதனைகளை நேரடியாக ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டு Snell Memorial Foundation மூலம் சான்றிதழ் வழங்கப்படும் ஹெல்மெட் உலகின் மிகவும் பாதுகாப்பான தலைகவசங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
FIM Certified Helmets
குறிப்பாக ரேசிங் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வேகமான தாக்குதலை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது. குறிப்பாக இந்த ஹெல்மெட்கள் ஸ்டீரிட் ரேஸ் அதிகமாக பங்கேற்பவர்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.