டாடா மோட்டார்சின் ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆடம்பர சொகுசு கார் தயாரிப்பாளரின் ரேஞ்சரோவர், டிஃபென்டர் மற்றும் டிஸ்கவரி போன்ற மாடல்களுக்கு ரூ.4.50 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.30.4 லட்சம் வரை குறைய உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
40 % ஜிஎஸ்டி வரி முறைக்கு ஆடம்பர கார்கள் மாறியுள்ளதால், பெரும்பாலான சொகுசு கார் தயாரிப்பாளர்களின் வாகனங்கள் அதிகபட்சமாக 10 % வரை விலை குறைய துவங்கியுள்ளது.
JLR Brand | Price Benefits Post-GST Implementation (₹) |
Range Rover | From 4.6 Lakh up to 30.4 Lakh |
Defender | From 7 Lakh up to 18.6 Lakh |
Discovery | From 4.5 Lakh up to 9.9 Lakh |
மேலும் மற்ற நிறுவனங்களை போல செப்டம்பர் 22 முதல் அல்லாமல் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி 2.0 பலன்களை செயல்பாட்டுக்கு ஜேஎல்ஆர் கொண்டு வந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் முதல் வாரத்திலே ஜிஎஸ்டி பலன்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.