இந்தியாவின் மிகவும் விருப்பமான மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றான ஜாவா நிறுவனத்தின் யெஸ்டி மோட்டார்சைக்கிள் மீண்டும் வருவது உறுதியாகியுள்ள நிலையில் அதிகார்வப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

Jawa Bike

யெஸ்டி  மோட்டார்சைக்கிள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜாவா மற்றும் பிஎஸ்ஏ போன்ற நிறுவனங்களை கையகப்படுத்திய மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் இருசக்கர வாகன பிரிவு தற்போது யெஸ்டி இணையதளத்தை அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Jawa Bike

இந்தியாவில் 1960 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகளில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வந்த ஐடியல் ஜாவா நிறுவனம் இரு ஸ்ட்ரோக் எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுமையாக இந்திய சந்தையில் வெளியேறியு. ஆனால் இன்றைக்கும் ஜாவா 350 பைக்குகள் உள்பட  மற்றும் யெஸ்டி ரோடுகிங் போன்ற மாடல்களுக்கு தனியான மதிப்பு உள்ளதை பலரும் அறிந்த உண்மையே , மீண்டும் யெஸ்டி இழந்த பெருமையை மீட்டெடுக்குமா என பொறுத்திருந்து காணலாம்.

தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள http://yezdi.com  என்ற பெயரில் தொடங்கப்பட்டு தனது முந்தைய மாடல்களின் சிறப்புகள் உள்ளிட்ட அனைத்தும் வரிசைப்படுத்தியுள்ளது. இதில் யெஸ்டி ரோடுகிங், யெஸ்டி கிளாசிக், யெஸ்டி CL II, யெஸ்டி மோனோஆர்ச், யெஸ்டி டீலக்ஸ் என அனைத்து மாடல்களையும் வரிசைப்படுத்தியுள்ளது.

Jawa Bike

ஜாவா மற்றும் பிஎஸ்ஏ என இரண்டு நிறுவனங்களையும் தன் கட்டுபாட்டில் வகைத்திருக்கும் மஹிந்திரா 200சிசி மற்றும் அதற்கு கூடுதலான சிசி பிரிவில் மீண்டும் கிளாசிக் மோட்டார் ராஜாக்களை களமிறக்க தயாராகியுள்ளது.

வருகின்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக புதிய மாடல்கள் காட்சிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அடுத்த வருடத்தின் இறுதியில் யெஸ்டி ரோடுகிங் உள்பட அனைத்து பைக்குளும் நவீன தலைமுறைக்கு ஏற்ற வகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Jawa Bike Jawa Bike

Jawa Bike