Categories: Auto News

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

MG CyberSter select dealer

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி செலக்ட் (MG Select) என்ற பெயரில் டீலர்களை துவங்க திட்டமிட்டு இருக்கின்றது. முதற்கட்டமாக வருகின்ற 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டீலர்கள் துவங்கப்பட்டு உடனடியாக டெலிவரி தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த டீலர்களில் குறிப்பிட்ட விலைக்கு மேல் என்று வரையறுக்கப்படாமல் ஆடம்பர வசதிகள் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட New Energy Vehicles வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த டீலர்களில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்கள் இதற்கு பிரத்தியேகமான நெட்வொர்க்கை நிறுவனம் உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றது.

இதுபோன்ற டீலர் நெட்வொர்க்கை ஏற்கனவே மாருதி சுசூகி நிறுவனம் மிகச் சிறப்பாக நெக்ஸா என்ற பெயரில் நடத்தி வருகின்றது அதற்கு இணையாகத்தான் இந்த முயற்சியை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடங்கி இருப்பதாக தெரிகின்றது.

எம்ஜி செலக்ட் டீலர்களில் முதல் மாடலாக வெளியிடப்பட உள்ள சைபர்ஸ்டெர் (CyberSter) ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் கார் மாடலாகும்.

ஆரம்பநிலை மாடல் ஒற்றை ரியர் ஆக்சிலில் பொருத்தப்பட்ட 308hp பவர் வழங்கும் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இதில் 64kWh பேட்டரி கொண்டிருப்பதனால் 520km ரேஞ்ச் கொண்டுள்ளது.

டாப் CyberSter வேரியண்டில் 77kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகப்படியாக 580km ரேஞ்ச் கொண்டுள்ளது, AWD பெற்ற இந்த மாடலில் இரண்டு மோட்டார் இணைந்து 544hp மற்றும் 725Nm வெளிப்படுத்தும். 3.2 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்ட உதவுகிறது.