11 ஆண்டுகளுக்கு முன்னர் மினி E என்ற பெயரில் 600 மின்சார கார்களை விற்பனைக்கு வெளியிட்டிருந்த நிலையில் புதிதாக மினி எலக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை வெளியிட்டுள்ள நிலையில் பேட்டரி கார் 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மினி எலக்ட்ரிக் கான்செப்ட் கார்
மினி சொகுசு கார் தயாரிப்பாளர் பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார்களை வடிவமைப்பதில் தனித்துவமான திறனை பெற்றுள்ள இந்நிறுவனம் மின்சார கார்கள் மீதான பார்வையை அதிகரித்துள்ளது.
புதிய மினி எலக்ட்ரிக் கார் கான்செப்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மினி தலைமை வடிவமைப்பாளர் கூறுகையில் கடந்த 6 மாதங்களாக வடிவமைக்கப்பட்டு வருகின்ற இந்த கான்செப்ட் மாடல் மினி காரின் பாரம்பரிய தோற்றத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. விற்பனையில் உள்ள மினி கூப்பர் காரின் தாத்பரியத்தை பின்னணியாக கொண்டு மிக நேர்த்தியான வட்ட வடிவ முழு எல்இடி முகப்பு விளக்குகளுடன், நேர்த்தியான ஏர் இன்டேக் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் 19 அங்குல அலாய் வீல், நேர்த்தியான ஸ்கிட் பிளாட் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த மாடலின் பின்புற தோற்ற அமைப்பில் எல்இடி டெயில் விளக்குகள் பெற்ளிருக்கும்,
இன்டிரியர் அமைப்பு மற்றும் மின்சார பேட்டரி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த காரின் முழுமையான விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ வாயிலாக வெளியிடப்பட உள்ளது.