சென்னை , டெல்லி , பெங்களூரு மற்றும் மும்பை என அனைத்து முன்னனி மெட்ரோ நகரங்களும் கடுமையான வாகன நெரிசலில் தவித்து வருகின்ற நிலையில் 90 சதவீத இந்தியர்களிடம் எந்த வாகனமும் இல்லை என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றது.
அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் மொத்தம் இருசக்கர வாகனங்களும் உள்பட 18.64 கோடி வாகனங்கள் உள்ளது. இவற்றில் பொது போக்குவரத்து பேருந்துகளின் பங்கு வெறும் 1 சதவீதம் அதாவது 18 லட்சம் பேருந்துகள் மட்டுமே உள்ளது இவற்றில் பெரும்பாலும் மினி பஸ் , பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 1.6 லட்சம் பேருந்துகளை மட்டுமே மாநில போக்குவரத்து கழகங்கள் (state road transport undertakings – SRTUs) நாடு முழுவதும் பெற்றுள்ளது.
1951 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் பஸ் 10 சதவீத எண்ணிக்கையில் இருந்து தற்பொழுது 1 சதவீதமாக குறைந்துள்ளது. பொது போக்குவரத்து சாதனங்கள் குறைவாக இருப்பதனாலே இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அந்த இடத்தை நிரப்பும் நோக்கில் அதிகரித்து வருகின்றது.
நகரங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து வாகனங்களை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் நகரும் இந்தியா (Move In India ) என்கின்ற திட்டத்தை அரசு விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகின்றது. பொது போக்குவரத்து சாலைகளை அதிகரிப்பது மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மூவ் இன் இந்தியா திட்டம் அமையும்.
இந்த திட்டத்தின் வாயிலாக அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களுக்கும் (state road transport undertakings – SRTUs) கூடுதலான நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் பஸ் பர்மீட் முறையை தாராளமயமாக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து இனைப்பினை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு வருகின்றது.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன ? மக்களே …!