Automobile Tamil

தமிழகத்துக்கு புதுசா இது..! ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் படத்தை வீழ்த்திய டிரைவர்கள்

கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் படத்தை தோற்கடித்த காரணத்துக்காக இரு டிரைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தமிழகத்துக்கு புதிது போன்ற தோற்றத்தை தந்திருந்தாலும், இது ரொம்ப பழசுதான தனியார் பஸ் டிரைவர்களுக்கு..

தனியார் பஸ்கள்

கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், இரண்டு தனியார் பேருந்துகள் இந்த சாலையில் அதிவேகமாக பயணிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியானதை தொடர்ந்து இரு பேருந்தின் டிரைவர்களும் கைது செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துள்ள நிலையில் மேலும் வேகமாக இயக்கப்பட்ட 31 தனியார் பேருந்துகள் கோவை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தனியார் பேருந்துகள் பெள்ளாச்சியில் மட்டுமா வேகமாக இயக்கப்படுகின்றன இல்லை என்பதே உண்மை, பொதுவாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இது ரொம்ப பழசுதான், பொதுவாகவே பெரும்பாலான தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அட்டவனை என்பது மிக குறுகிய இடைவெளியை பெற்றிருக்கும். அந்த குறுகிய காலத்தில் பின்னே வருகின்ற அடுத்த பேருந்து முன்னே செல்கின்ற பேருந்து என இரு பேருந்துகளுக்கும் இடையிலான நேர வித்தியாசத்தை கடைபிடிக்கவும் , வசூலை அதிகரிக்கவும் மிக கடுமையாகவே தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராடி வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் இயக்கப்படுகின்ற நெடுந்தொலைவு பயணிக்கும் சொகுசு ஆம்னி பஸ்கள் வேகத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் யாருக்குமில்லை. முறையான வேகத்தை பராமரிக்க வேண்டும் என்பதனை மறந்து சொன்ன நேரத்துக்கு சரியாக பயணிகளை கொண்டு சேர்க்கவேண்டிய நேரத்தில் ஓட்டுநர்கள் கடுமையாக போராட வேண்டி உள்ளது.

அதிகரித்து வருகின்ற போக்குவரத்து நெரிசல்களில் முறையாக விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படாத சாலைகள் போன்றவையும் அதிவேகத்துக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றேயாகும்.

தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதனாலே பலரும் தனியார் பேருந்துகளையே விரும்பி பயணிக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

வாட்ஸ்அப், பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூகவலை தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அனைத்தும் மிக வேகமாக பரவி வருகின்றது. கடவுள் உங்களை கண்கானிக்க தவறினால் கூட சமூக ஊடகங்கள் உங்களை 24 மணி நேரமும் கண்கானிக்கின்றது என்பதனை யாரும் மறந்துடாதிங்க…!

மெதுவாக இயக்கப்படுகின்ற எந்த மாட்டு வண்டி பேருந்துகளையும் நாம் விரும்பாத காரணத்தாலே அதிவேகம் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஓட்டுநர்கள் தள்ளப்படுகின்றனர், இவற்றுக்கு காரணம் தனியார் பேருந்து உரிமையாளரா ? ஓட்டுநரா ? இல்லை மக்களாகிய நாம் தான் காரணம் என்பதனை சிந்தியுங்கள்..

வேகம் விவேகம் அல்ல

Exit mobile version