Automobile Tamilan

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி.., ரெனால்ட் கார்கள் விலை ரூ.96,395 வரை குறைப்பு

renault triber

ஜிஎஸ்டி 2.0 எதிரொலியால் ரெனால்ட் இந்தியாவின் ட்ரைபர், கிகர் மற்றும் க்விட் ஆகிய மூன்று மாடல்களின் விலை ரூ.40,095 முதல் அதிகபட்சமாக ரூ.96,395 வரை குறைக்கப்பட உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

முன்பாக 28 % வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி தற்பொழுது 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள கார்களுக்கு 18 % வரை ஜிஎஸ்டி ஆக மாற்றப்பட்டுள்ளது, கூடுதலாக மற்ற பிரிவுகளுக்கு 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

18 % ஆக மாற்றப்பட்ட புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி விலைப் பட்டியல்

Variant Old Price (INR) New Price (INR) Change (INR)
Authentic 6,29,995 5,76,300 -53,695
Evolution 7,24,995 6,63,200 -61,795
Techno 7,99,995 7,31,800 -68,195
Emotion 8,64,995 7,91,200 -73,795
Emotion AMT 9,16,995 8,38,800 -78,195
Emotion MT DT 8,87,995 8,12,300 -75,695
Emotion AMT DT 9,39,995 8,59,800 -80,195

ட்ரைபரின் விலை ரூ.53,695 முதல் ரூ.80,195 வரை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் க்விட் காரின் விலை குறைக்கப்பட்ட பின்னர்

Variant Old Price (INR) New Price (INR) Change (INR)
RXE MT 4,69,995 4,29,900 -40,095
RXL MT 5,09,995 4,66,500 -43,495
RXL AMT 5,54,995 4,99,900 -55,095
RXT MT 5,54,995 4,99,900 -55,095
RXT AMT 5,99,995 5,48,800 -51,195
Climber 5,87,995 5,37,900 -50,095
Climber AMT 6,32,995 5,79,000 -53,995
Climber DT 5,99,995 5,48,800 -51,195
Climber AMT DT 6,44,995 5,90,000 -54,995

க்விட் காரின் விலை ரூ.40,095 முதல் ரூ.54,995 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை குறைப்பு 18 % ஜிஎஸ்டி கீழ்

Variant Old Price (INR) New Price (INR) Change (INR)
Authentic MT 6,29,995 5,76,300 -53,695
Evolution MT 7,09,995 6,49,500 -60,495
Evolution AMT 7,59,995 6,95,200 -64,795
Techno MT 8,19,995 7,50,100 -69,895
Techno DT MT 8,42,995 7,71,100 -71,895
Emotion MT 9,14,995 8,37,000 -77,995
Emotion DT MT 9,37,995 8,58,000 -79,995
Techno AMT 8,69,995 7,95,800 -74,195
Techno DT AMT 8,92,995 8,16,800 -76,195
Emotion MT 1L T 9,99,995 9,14,700 -85,295
Emotion DT MT 1L T 9,99,995 9,14,700 -85,295
Techno CVT 1L T 9,99,995 9,14,700 -85,295
Techno DT CVT 1L T 9,99,995 9,14,700 -85,295
Emotion CVT 1L T 11,29,995 10,33,600 -96,395
Emotion DT CVT 1L T 11,29,995 10,33,600 -96,395

ரூ.53,695 முதல் ரூ.96,395 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு பட்டியல் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மாமில்லபல்லே கருத்து தெரிவித்த பொழுது,

“ஜிஎஸ்டி 2.0 பலனை முழுமையாக வழங்குவது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அளிக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். இந்த சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி, எங்கள் கார்களை மேலும் இலகுவாக வாங்குவதற்கு மட்டுமல்லாமல், பண்டிகைக் காலத்தில் தேவையையும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு இந்திய வீட்டிற்கும் புதுமை, மதிப்பு மற்றும் நம்பிக்கையை வழங்குவதற்கான எங்கள் நோக்கத்தில் ஒரு முன்னேற்றமாகும்.”

மேலும் படிக்க – டாடா மோட்டார்ஸ் ஜிஎஸ்டி விலை குறைப்பு ரூ.1.55 லட்சம் 

Exit mobile version