ராயல் என்ஃபீல்டிலிருந்து விலகிய ருத்ரதேஜ் சிங்

ரூடி என ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற ருத்ரதேஜ் சிங், ராயல் என்ஃபீல்ட் தலைவர் பதவிலியிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. புதிய தலைவராக ஐசர் மோட்டார்சின் சிஎஃப்ஓ லலீத் மாலிக் உடனடியாக நியமிக்கப்படுள்ளார்.

நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்ட் நிறுவன தலைவராக செயல்பட்டு வந்த ரூத்ரதேஜ் சிங், இந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இநிறுவனத்தின் தலைவர் பதவியை ஐசர் மோட்டார் தலைமை நிதி அதிகாரியாக செயல்படும் ல்லீத் மாலிக் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2012 முதல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் தலைவராக பணியாற்றி வந்தார். அவர் விலகியது குறித்து என்ஃபீல்ட் செய்தி குறிப்பில் 2015 ஜனவரி முதல், தலைவர் பதவி வகித்து வந்த சிங், ராயல் என்ஃபீல்டுக்கு வெளியே அவரது சொந்தமான வாய்ப்புகளைத் தொடர முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.